tamilnadu

img

கிடப்பில் தடுப்பணை திட்டங்கள் - வீணாகும் காவிரி உபரிநீர் - ஐ.வி.நாகராஜன்

கிடப்பில் தடுப்பணை திட்டங்கள் - வீணாகும் காவிரி உபரிநீர் - ஐ.வி.நாகராஜன்

ஒவ்வொரு ஆண்டும் தமிழக டெல்டா பாசனத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீ ரை கர்நாடகம் காவிரி யில் விடுவிக்க வேண்டும். கர்நாடகம் தண்ணீரை முழு மையாக கொடுக்காமல் இழுத்தடிப்பதோடு, காவிரியில் அதிகளவு தண்ணீர் வரும்போது அதை சேமிக்க வழி யில்லாமல் கடலில் வீணாக்கும் கொடுமையும் தொடர்கிறது. 2020-21ல் 192 டிஎம்சி பாசனத்துக்கும் 16.3 டிஎம்சி கடலுக்கும், 2021-22ல் 189 டிஎம்சி பாச னத்துக்கும் 904 டிஎம்சி கடலுக்கும், 2022-23ல் 89 டிஎம்சி பாசனத்துக்கும் 489 டிஎம்சி கட லுக்கும், 2024-25ல் 88 டிஎம்சி பாசனத்துக்கும் 63 டிஎம்சி கடலுக்கும் அனுப்பப்பட்டது. தண்ணீ ரை தேக்கி வைக்க முறையான திட்டங்கள் இல்லாததும் தொடங்கப்பட்ட திட்டங்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதுமே இதற்கு காரணம். கதவணைத் திட்டங்களின் பரிதாபநிலை மேட்டூர் அணை உபரிநீர் வெளியேற்றப் படும்போது கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். நிலத்தடிநீர் மட்டம் குறைந் தால் குடிநீர் வினியோகம் பாதிக்கும் என்பதால் 2014இல் முதல்வர் ஜெயலலிதா ரூ.400 கோடியில் குமாரமங்கலம்-ஆதனூர் இடையே கதவணை கட்டப்படும் என்று அறிவித்தார். ஆண்டுகள் பல ஆன பின்பு இப்போதுதான் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆனால் கதவணையில் தண்ணீரை தேக்கி னால் மேற்குபகுதி நிலங்கள் பாதிப்படையும் என்று நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்ற உத்த ரவு வரும்வரை தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. நாகை மாவட்டம் உத்தம சோழபுரத்தில் ரூ.50 கோடி மதிப்பில் கட்டப்படும்  தடுப்பணை நிறைவடைந்தால் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். மயிலாடுதுறை மாதிரவேளூர், கடலூர்,  கருப்பூர் பகுதியில் ரூ.83 கோடி மதிப்பில் படுக்கை  அணை திட்டம் பூமிபூஜை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் தொடங்கவில்லை. வல்லுநர் பரிந்துரைகளும்  விரிவான திட்டங்களும் காவிரி ஆற்றின் வெள்ளநீரைப் பயன்படு த்துவது சாத்தியம் என தொடர்ந்து கூறிவரும் பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறைந்தபட்சம் 100 டிஎம்சி வெள்ளநீர் காவிரியிலிருந்து கடலில் கலப்பதாக தெரிவிக்கின்றனர். கடைசியாக 2022ஆம் ஆண்டில் 333 டிஎம்சி அளவுக்கு வெள்ள மிகைநீர் காவிரி ஆற்றில் ஓடியுள்ளது. தென்னிந்தியாவின் நீர்ப்பாசனத் தந்தை சர் ஆர்தர் காட்டன் காவிரிப்படுகையின் மிகக்குறைவான சரிவினால் மேட்டூருக்கு கீழே பெரிய நீர்த்தேக்கம் கட்ட வழியில்லை என்பதை நன்கறிந்திருந்தார். எனவே பொறியாளர் கர்னல் எல்லீஸ், மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை 120 அடியிலிருந்து 130 அடியாக உயர்த்தலாம் என்று கூறினார் என்பது இங்கு கருதத்தக்கது. பொதுப்பணித்துறை வல்லுநர்களின் கருத்துப்படி, காவிரியின் குறுக்கே கண்டி பாளையம், கெண்டாடலம் மரப்பாளையம், குமாரபாளையம், ராமசமுத்திரம், முத்தரச நல்லூர், கிளிக்கூடு, லாலாப்பேட்டை, பெட்ட வாய்த்தலை, குணசீலம் ஆகிய இடங்களிலும், கொள்ளிடத்தில் வேங்கூர், நொச்சியம், கூகூர்,  திருமழபாடி, ஏலாக்குறிச்சி, காமரசவல்லி, கோடாலிக்கருப்பூர் ஆகிய இடங்களிலும் கதவணைகள் அமைக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் புகழூர் கதவணை 90 சதவீதம் பணி முடிவடைந்துள்ளது, மாயனூர் கதவணையில் 1.8 டிஎம்சி தண்ணீர் சேமிக்கப் படுகிறது. நெரூர்-உன்னியூர் தடுப்பணை கட்டப்படுகிறது. திருவையாறு தியாகராஜர் சமாதி அருகே சோழர் கால உறைக் கிணறு இன்றும் அதிக நீர்மட்டத்தில் நிலத்தடிநீர் செறி வூட்டலுக்கு பயன்படுகிறது. டெல்டாவில் உள்ள 29 பிரதான கிளை ஆறு களில் எல்லாவற்றிலும் தடுப்பணைகளும், 5 கிலோமீட்டருக்கு ஒரு படுக்கை அணையும், ஒரு கிலோமீட்டருக்கு ஒரு செயற்கை உறை  கிணறும் அமைக்க வேண்டும். 35 ஆயிரம் குளங்கள், ஏரிகளை காவிரி நீரைக்கொண்டு நிரப்பிய பின் டெல்டாவுக்கு தண்ணீர் அனுப்ப வேண்டும். இதை அமலாக்க அரசும் பொதுப் பணித்துறையும் தயாரானால் விவசாய சாகு படிகளை தண்ணீர் தட்டுப்பாடின்றி செய்ய முடி யும். இதில் அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.