சாதியத்திற்கு எதிரான பண்பாட்டு யுத்தம் கலைப்பிரச்சாரம்
நெல்லை நிகழ்வில் கே.சாமுவேல்ராஜ் பேச்சு
திருநெல்வேலி, ஆக 16- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5 ஆவது மாநில மாநாடு மயிலாடுதுறையில் நடை பெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு சாதியம் தகர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணியும் சென்னை கலைக்குழுவும் இணைந்து தமிழகம் முழுவதும் கலை பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்டு 16 நெல்லையில் நடைபெற்ற கலைப் பிரச்சாரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பங்கேற்றார். உழைப்பாளி மக்களின் ஒற்று மையை மையப்பொருளாக வைத்து கலை நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் க. ஸ்ரீராம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.மதுபால், மாவட்டச் செயலாளர் சுடலைராஜ், மாவட்டப் பொருளாளர் வழக்கறிஞர் கு.பழனி மற்றும் பலர் கலந்துகொண்டனர். பாளையங்கோட்டை காமராஜர் நகர், பாளையங்கோட்டை தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை அருகில் கலைப் பிரச்சாரம் நடைபெற்றது. கலைப்பிரச்சார பயணம் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமு வேல்ராஜ் கூறுகையில், ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக மனிதர்களின் இதயத்தில் ஆழமாக வேர்பிடித்திருக்கிற சாதியத்தை அனைத்துத்தளங்களிலும் எதிர்த்து போராட வேண்டும். பொரு ளாதாரத் தளத்திலும்,சமூக தளத்திலும் மட்டுமல்ல பண்பாட்டுத் தளத்திலும் நடத்தப்படும் பண்பாட்டுப் போரின் வழியாகவும் மக்களிடம் பணியாற்றிட வேண்டும். உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் சிந்தனையின் மீது இறந்த தலைமுறையினரின் சிந்தனை மரபு ஒரு அமுக்குப் பேய் போல் அழுத்திக் கொண்டிருக்கிறது என்று பேராசான் கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவார். இந்தியாவின் சாதி அமைப்பிற்கும் அது பொருத்தமான தாகவே இருக்கிறது. தீண்டாமை யை,வன்முறையை பார்த்துபார்த்து பழகுவது, சடங்குகள் மற்றும் சம்பிர தாயங்களின் வழியாகவும், பொரு ளாதார அடித்தளத்திலும் இந்திய மக்களின் வாழ்வின் ஒரு பகுதியாக சாதியம் மாறி, கெட்டித்தட்டி போய் இருக்கிறது. சாதியத்திற்கு எதிரான மாபெரும் பண்பாட்டு யுத்தத்தை நடத்து வது என்கிற அடிப்படையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 16 அன்று தூத்துக்குடியில் துவங்கி ஆகஸ்ட் 25 அன்று தஞ்சாவூ ரில் நிறைவடைகிற இந்த கலைப்பிரச்சார பயணத்திற்கு பொதுமக்கள் பங்கேற்று ஆதரவளித்திட வேண்டும் என்று தெரிவித்தார்.