tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதலமைச்சரின் சம்பந்தி  வேதமூர்த்தியின் உடல் எரியூட்டல்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (81) உடல்நலக் குறைவால் புதன்கிழமை நள்ளிரவு காலமானார். அவரது உடல் கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத் தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், உடனடியாக சென்னை திரும்பினார். குடும்பத்தினருடன் சென்று சம்பந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.  தலைவர்கள் அஞ்சலி சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க. சாமிநாதன்,  திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட அரசி யல் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள் உள்பட ஏராளமானோர் வேதமூர்த்தியின் உடலுக்கு  நேரில் அஞ்சலி செலுத்தினர்.  இந்நிலையில், வேதமூர்த்தியின் இறுதி நிகழ்ச்சிகள்  வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றன. அதைத்தொ டர்ந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு,  சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

அசன் மவுலானா வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

சென்னை: தேர்தல் செலவுக் கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ அசன் மவுலானா-வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து அசன் மவுலானா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2023-இல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் தந்தும் 2025  ஆகஸ்ட் 14 அன்று விசாரணைக்கு ஆஜராக மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வாக்குத் திருட்டு முறை கேட்டை அம்பலப்படுத்தியதால் உள்நோக்கத்துடன் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று அசன் மவு லானா குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசன் மவுலானா எம்எல்ஏ வழக்குத் தொடர் பாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தர விட்டுள்ளனர்.

போத்தீஸ் ஜவுளிக் கடைகளில்  வருமான வரித்துறை சோதனை! சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ்

ஜவுளிக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தினர்.  குறிப்பாக, சென்னை, நெல்லை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளில் வருமான வரித்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டனர். சென்னையில் தி. நகரில் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகளிலும், ஆர்.ஏ.  புரம் கிரசென்ட் தெருவில் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடை  உரிமையாளர்களில் ஒருவரான ரமேஷ் என்பவர் வீட்டி லும் இந்த சோதனை நடைபெற்றது. மேலும், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை நீலாங் கரையில் உள்ள போத்தீஸ் உரிமையாளர் மகன் போத்து ராஜா, அசோக் ஆகிய இருவரின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குரோம்பேட்டை யில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மஹால் மற்றும் துணிக் கடைகளிலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு; தமிழிசை புறக்கணிப்பு

சென்னை: குடியரசுத் துணைத்தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தில்லி யில் வெள்ளிக்கிழமை யன்று பதவியேற்றார். இந்நிலையில், இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பாஜக தலைவர்களான தமிழிசை  சவுந்தர்ராஜன், அண்ணா மலை ஆகியோர் பங்கேற் கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அமைச் சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகி யோர் பங்கேற்றனர். நேபாளம் சென்றிருந்த  116 பேர் நாடு திரும்பினர் சென்னை: நேபாளத் திற்கு சுற்றுப் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 நபர்கள் பத்திரமாக இந்தியா திரும்பி விட்டனர் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும்,  நேபாளத்தில் சிக்கித் தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும், நேபாளத் தில் சிக்கியுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலைகுறித்து தெரிந்து கொள்வதற்கும் தில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வன்னியர் சங்கம் யாருக்கு? பாமக-வினர் கைகலப்பு திண்டிவனம்: திண்டி வனத்தில் உள்ள வன்னி யர் சங்க அலுவலகத்தை ராமதாஸ் தரப்பினர் பூட்டிய தால், அன்புமணி - ராம தாஸ் தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று, போலீசார் பேச்சு வார்த்தை நடத்தும் நிலை யில், அலுவலகம் இயங்கி  வரும் கட்டடத்தின் உரிமை யாளரான செந்தில், அன்பு மணி தரப்பினர் அதனை பயன்படுத்திக் கொள்ள எழுத்துப் பூர்வமாக கடிதம் அளித்தார்.