tamilnadu

மழையில் நனைந்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்  கொள்முதல் செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

கடலூர், அக். 4 -  மழையில் நனைந்த நெல் மூட்டை களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  இதுதொடர்பாக கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  சிபிஎம் மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலை மையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூர் மாவட்டம் முழுவதும், சமீபத்தில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட குமராட்சி, காட்டுமன்னார்கோயில் ஒன்றி யங்களில் பயிர்களை பாதுகாக்கவும், நெல் கொள்முதல் நிலையங்களில் மழை யால் நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு இந்த மாதம் அனைத்து ரேசன் கடைகளிலும் பாமாயில், சர்க்கரை, மைதா, ரவா, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்கள் கூடுதலாக இரண்டு மடங்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டது. வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அதற்கான முன்தயாரிப்பு பணி களை மாவட்ட நிர்வாகம் விரைந்து செய்ய வேண்டும். ஏரி, குளம், வாய்க்கால்கள் கரை களை பலப்படுத்த வேண்டும், குடியிருப்பு களைச் சுற்றி தண்ணீர் தேங்காத வகை யில் அனைத்து வடிகால்களையும் தூர்வார ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலி யுறுத்தப்பட்டது. பழுதடைந்த ஷட்டர்களை சரி பார்க்கவும், பொதுப்பணித்துறை தேவை யான அளவிற்கு மணல் மூட்டைகளை தயார் செய்ய வேண்டும். கெடிலம், பெண்ணையாற்று கரைகளை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சேதமடைந்த கஸ்டம்ஸ் சாலையை அகலப்படுத்தி கண்டரக்கோட்டை வரை புதுப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. கடலூர் டவுன்ஹால் புதிதாக புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தை கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவது சம்பந்தமாக அனைத்து காவல் கோட்டங்களிலும் அனைத்து கட்சி கூட்டங்களை நடத்தி அதன் பேரில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.