tamilnadu

img

கோவில்பட்டியில் சிபிஎம் பொதுக்கூட்டம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்பு

கோவில்பட்டியில் சிபிஎம் பொதுக்கூட்டம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. நகரச் செயலாளர் கே. சீனிவாசன் தலைமையிலான இந்தப் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர்  பெ. சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் சு. வெங்கடேசன் எம்.பி., கே. அர்ஜுணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ரவீந்திரன், பி. புவிராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளர் எம். தெய்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.