தோழர் சி. சுந்தரராஜ் மறைவு சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்
சென்னை, அக். 9 - வடசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த தோழர் சி. சுந்தர ராஜ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இரங்கல் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு: வடசென்னை மாவட்டத்தின் மூத்த தோழர்களில் ஒருவ ரான தோழர் சி. சுந்தரராஜ் (73) வியாழனன்று உடல்நலக்குறை வால் உயிரிழந்துள்ளார் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், புகழஞ்சலியையும் தெரிவித்து கொள்கிறது. தோழர் சி. சுந்தரராஜ், அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் ஸ்டெட் பாஸ்ட் என்ற தொழிற் சாலையில் பணிபுரியும் போது சிஐடியுவில் தன்னை இணைத்து கொண்டு தொழிலாளர்களின் நலன்களுக்காக பாடுபட்டவர். பின்னர் 1975-ஆம் ஆண்டு களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் இன்ஜினியரிங் எம்ப்ளாயீஸ் யூனியனின் துணைத் தலைவ ராகவும், கட்சியின் அம்பத்தூர் ஆவடி பகுதிக் குழு செயலாள ராகவும், மாவட்டக்குழு, மாவட்ட செயற்குழு உறுப்பின ராகவும், முழுநேர ஊழியராக வும் திறம்பட பணியாற்றியவர். அம்பத்தூர் ஆவடி பகுதி யில் வாலிபர், மாணவர், மாதர் சங்கம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புக்களையும், புறநகர் பகுதியில் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட வர்க்க இயக்கங் களையும் உருவாக்குவதில் முன்னணி பாத்திரம் வகித்தவர். அவசர நிலைக் காலத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். தனது இறுதி மூச்சு வரை அம்பத் தூர் பகுதி மக்களின் பிரச்சனை களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். தான் மட்டுமின்றி தனது குடும்பத்தினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைத்து இயக்கப் பணி களில் ஈடுபடுத்தியவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும், அம்பத்தூர் பகுதிவாழ் மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துய ருற்றிருக்கும் அவரது துணைவி யாருக்கும், மகன், மகள் மற்றும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு இரங்கல் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.