அரியலூர் மாவட்ட காவல் துறையின் பொய்ச் செய்திக்கு சிபிஎம் மறுப்பு
அரியலூர், அக். 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அண்மையில் நடத்திய பொதுப்பாதை மீட்பு போராட்டம் குறித்து, அரியலூர் மாவட்டக் காவல்துறை தவறான செய்தி வெளியிட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்டக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன் வெளி யிட்டுள்ள மறுப்பு அறிக்கையில், “சிபிஎம் காட்டுபிரிங்கியத்தை அடுத்த பாலக்கரை கிராமத்தில், பாதை கேட்டு அந்த ஊர் பொதுமக்களுடன் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 23.9.2025 அன்று அரியலூர் அண்ணாசிலை அருகில் பாதை கேட்டு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், பி. துரைசாமி, கே.கிருஷ்ணன், துரை அருணன், மூத்த தோழர் சிற்றம்பலம், அரியலூர் ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போதும், எந்தவித அதிகாரப் பூர்வமான பேச்சுவார்த்தை நடத்திட வருவாய் துறை முன்வரவில்லை. அன்றே மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகி யோரை சந்தித்து மீண்டும் மனு கொடுத் தனர். வருவாய் துறை நீதிமன்ற உத்த ரவை மட்டுமே காரணம் காட்டி தொ டர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை அலைக் கழித்து வந்தது. இந்நிலையில் தான், கடந்த 03-09-2025 அன்று பாதை மீட்கும் போ ராட்டம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் தலைமையில் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், பொதுமக்களும் முடிவு செய்து 10 நாட்களுக்கு முன்பாகவே நோட்டீஸ் வெளியிட்டனர். அந்த கட்டத்தில் கூட வருவாய் துறையோ, காவல் துறையோ பேச்சு வார்த்தைக்கு அழைக்க வில்லை. அவ்வாறு பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தால் பிரச்சனையை சுமூகமாக முடித்திருக்க முடியும். வரு வாய்த்துறையும், காவல் துறையும் பார்வையாளராகவே இருந்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மை யாக கண்டிக்கிறது. இந்த பின்னணியில்தான், கடந்த செப்.3 ஆம் தேதி, திட்டமிட்டப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பொதுமக்களும் இணைந்து பொதுப் பாதையை மீட்பதற்காக ஊர்வலமாக வந்த போது, நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர், டிஎஸ்பி ரவிச்சந்தி ரன் தலைமையில் ஊர்வலத்தை தடுத்து, பெண்களையும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களையும் தாக்கினர். இதில், அரியலூர் ஒன்றியச் செயலா ளர் அருண்பாண்டியனின் சட்டை கிழிந்து அந்த இடத்திலேயே விழுந்து விட்டார். காவல்துறையும், ஆக்கிரமிப்பாள ரின் குடும்பத்தினரும் சேர்ந்து தாக்கிய தில் மூன்று பெண்கள் படுகாய மடைந்து, அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் இருப்பவர்களிடம் இதுவரையிலும் வாக்குமூலம் பெற்று, காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்யவில்லை. இது காவல்துறையின் மெத்தன போக்கை காட்டுகிறது. அதன் பிறகும் டிஎஸ்பி ரவிச்சந்தி ரன் தலைமையிலான காவல்துறை யினர் மாநில தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர்களை அடித்துத் தள்ளி வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். இது குறித்த முழுமையான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. இதையெல்லாம் மறைத்து, மாவட்ட காவல் துறை எதுவுமே நடக்கா தது போல ஒரு பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பானது. காவல்துறையின் இந்த பொய்ச் செய்திக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறுப்பு தெரிவிக் கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
