நல்லாற்று பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகத்தில் சிபிஎம் போராட்டம்
அவிநாசி, அக்.17- நீதிமன்ற உத்தரவை மீறி நல்லாற்று பகுதி யில் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவல கத்தில் வெள்ளியன்று உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். திருமுருகன்பூண்டி நகராட்சி 10 ஆவது வார்டு பகுதியில் நல்லாறு ஓடை செல்கிறது. ஏற்கனவே ஆறு, குளம் உள்ளிட்ட பகுதிக ளில் எந்தவித கட்டிடமும் கட்டக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் உரிய அனு மதி பெறாமல் நல்லாற்றில் கழிவுநீர் சுத்திக ரிப்புத் தொட்டி கட்டி வருகிறது. இதை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 நாட்க ளுக்கு முன்பு தர்ணா போராட்டம் செய்தனர். மேலும், இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்நிலையில் வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி அலுவ லக நுழைவாயில் முன்பு காத்திருப்பு போராட் டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த நகராட்சி பொறியாளர் அனுமதி கடிதத்தை வெள்ளியன்று காண்பிப்பதாக தெரிவித்த னர். எனவே போராட்டம் ஒத்தி வைக்கப்பட் டது. இதைதொடர்ந்து வெள்ளியன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி நிர் வாகத்திடம் அனுமதி கடிதத்தை காண்பிக்கு மாறு கேட்டனர். இதற்கு நகராட்சி நிர்வாகம் அவகாசம் கேட்டுள்ளது. வியாழனன்று நகலை காண்பிப்பதாக ஒப்புக்கொண்டு, மீண்டும் அவகாசம் கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி அலுவல கத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட் ்டனர். இதை அறிந்த திருமுருகன்பூண்டி காவல் துறையினர், பொதுமக்களும், அரசு அலு வலர்களின் பணிகளும் பாதிப்படைவதால் ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நகராட்சி ஆணையர், காவல் துறையினர் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். இந்த பேச்சு வார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச. நந்தகோபால் பேசுகையில், திட்டத்தை நாங் கள் எதிர்க்கவில்லை, ஆனால் நல்லாற்றை சுத்தம் செய்ய வேண்டும். இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டி கட்டுவதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்ப டும்போது பொதுமக்கள் பாதிக்கப்படுவார் கள் என தெரிவித்தார். இதற்கு ஆணையர் ஆய்வு மேற் கொண்டு பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில், மாவட்ட ஆட்சியர் வாய்மொழி உத்தரவு மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி பணிகள் நடைபெறுகிறது என தெரி வித்தார். இதனை ஏற்க மறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நீங்கள் கூறியதை எழுத்துப்பூர்வமாக கொடுக்குமாறு தெரி வித்தனர். இதற்கு ஆணையர், அக்டோபர் 28 ஆம் தேதி அனுமதி கடிதம் பெற்று தருகி றோம். அதுவரை பணிகள் நடைபெறாது என வும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், சண் முகம், பாலசுப்பிரமணியம், ராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் திருமுருகன்பூண்டி கிளைச் செயலாளர் காமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
