tamilnadu

img

கல்பாக்கம் அணுசக்தி துறை, எச்பிஎல் நிறுவனங்களில் சிபிஎம் எம்பி ஆய்வு

கல்பாக்கம் அணுசக்தி துறை,  எச்பிஎல் நிறுவனங்களில் சிபிஎம் எம்பி ஆய்வு

செங்கல்பட்டு, அக்.16 - திண்டுக்கல் மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், கல் பாக்கம் அணுசக்தி துறை மற்றும் செங்கல்பட்டு அருகே திருமணி கிரா மத்தில் உள்ள தடுப்பூசி ஆராய்ச்சி நிறு வனத்திலும் ஆய்வுப் பணிகளை மேற் கொண்டார். அப்போது, தொழிலா ளர்களின் கோரிக்கைகளை கேட்ட றிந்தார். பிறகு, அந்த நிறுவனத்தின் அதி காரிகளிடம் தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து பேசினார். இந்த ஆய்வு பணியின்போது சிஐடியு  மாநிலச் செயலாளர் கே.சி கோபிகுமார், சிபிஎம் மாவட்டச் செய லாளர் பி.எஸ். பாரதிஅண்ணா செயற் குழு உறுப்பினர் இ.சங்கர், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. பகத்சிங்தாஸ், துணைச் செயலாளர் கல்பாக்கம் கே. பழனிசாமி, செங்கல் பட்டு எச்பிஎல் தொழிற் சங்க நிர்வாகி கள் எம். விநாயக மூர்த்தி, டி.எல்லப்பன், ரவி, பாவினி, ஸ்ரீராம்பானி கிராஜ், ஜி. ஜீவா ஆகியோர் உடனிருந்தனர்.