காஷ்மீர் தியாகிகள் தினத்தைக் கடைப்பிடிக்கத் தடை சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் தாரிகாமிக்கு வீட்டுச் சிறை!
ஒன்றிய பாஜக அரசு அராஜகம்
ஸ்ரீநகர், ஜூலை 13 - காஷ்மீர் தியாகிகள் தினத்திற்கு இந்தாண்டும் அனுமதி மறுத்துள்ள ஒன்றிய பாஜக அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமியை வீட்டுச்சிறை வைத்துள்ளது. 1931ஆம் ஆண்டு ஜூலை 13 அன்று ஜம்மு - காஷ்மீர் பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஹரி சிங்கின் ஆட்சிக்கு எதிராக காஷ்மீரிகளை எழுச்சி பெறுமாறு அழைப்பு விடுத்த அப்துல் கதீர், ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனைக் கண்டித்து காஷ்மீர் முஸ்லிம்கள் ஸ்ரீநகர் மத்திய சிறைச்சாலைக்கு வெளியே போராட்டம் நடத்தினர். அப்போது டோக்ரா ராணுவம் (பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் ஒரு காலாட்படைப் பிரிவு) துப்பாக்கிச் சூடு நடத்தி 22 பேரை படுகொலை செய்தது. ஸ்ரீநகரின் குவாஜா பஹாவு தீன் நக்ஷ்பந்தி (ஜியாரத் நக்ஷ்பந்த் சஹாப்) தர்காவுடன் இணைக்கப் பட்ட கல்லறையில் (மசார்-இ-சுஹாதா) அரசுப் படைகளால் 22 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப் பட்டன. 2019 முதல் மோடி அரசு தடை அவர்களின் நினைவு தினமான ‘ஜூலை 13’ - காஷ்மீர் தியாகிகள் தினம் காஷ்மீர் தினம்) என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்க ப்பட்டு வருகிறது. அதன்படி 94ஆவது “காஷ்மீர் தியாகிகள் தினம்” ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், ஒன்றிய பாஜக அரசானது, ஆளுநர் மனோஜ் சின்ஹா மூலம், இந்தாண்டும் தியாகிகள் தின கடைப்பிடிப்பிற்கு தடை விதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி (‘இந்தியா’ கூட்டணி) நடை பெற்று வந்தாலும், 2019-இல் அரசி யலமைப்புப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து நடைமுறை யில் உள்ள கட்டுப்பாடுகளை மோடி அரசின் உத்தரவின் பேரில் ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா நீட்டித்துள்ளார். காஷ்மீர் தியாகிகள் தினத்தன்று மசார்-இ-சுஹாதா கல்லறையில் அஞ்சலி செலுத்த- பொதுக்கூட்டம் நடத்த ஆளுநர் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. வீட்டுக் காவலில் சிபிஎம் எம்எல்ஏ மேலும், மசார்-இ-சுஹாதா கல்லறைக்கு செல்வதை தடுக்க ஜம்மு - காஷ்மீரின் முக்கிய தலை வர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமி எம்எல்ஏவை (குல்காம் சட்டமன்ற தொகுதி) வீட்டுச் சிறை அடைத்துள்ளது. இதனை தனது ‘டுவிட்டர் எக்ஸ்’ பக்கத்தில் யூசுப் தாரிகாமி புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். “என் வீட்டு வாசலில் பூட்டு போடப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். ஜூலை 13-இல் மறைந்த வீரர்களுக்கு மரி யாதை செலுத்தும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நாள் நம் அனைவரின் நினை வில் ஆழமாக பதிந்துள்ளது. ஜன நாயகத்தை மீட்டெடுக்கவும், நமது எதிர்காலத்தை மேம்படுத்தவும் தங்கள் உயிரை தியாகம் செய்த வர்களின் நினைவுச் சின்னம்” என யூசுப் தாரிகாமி குறிப்பிட்டுள்ளார்.
சிபிஎம் மத்தியக்குழு கண்டனம்
முகமது யூசுப் தாரிகாமி எம்எல்ஏவை வீட்டுக்காவலில் வைத்து இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் மற்றும் குல்காம் சட்டமன்ற உறுப்பினர் தாரிகாமி அவர்களின் வீட்டுக் காவல் (house arrest) மீது கடுமையாக கண்டனம் தெரி விக்கிறோம். ஜனநாயக உரிமைகளை அடக்குவது ஏற்க முடி யாதது” என சிபிஎம் மத்தியக்குழுவின் ‘டுவிட்டர் எக்ஸ்’ பக்கம் குறிப்பிட்டுள்ளது.