அஜித்குமார் குடும்பத்தினருக்கு சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தனிப்படைக் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரை அவர்களின் இல்லத்தில் சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூணன் ஆறுதல் கூறினார். கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்புச்சாமி, வீரபாண்டி, சுரேஷ், அய்யம்பாண்டி, ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரவி, நீலமேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.