tamilnadu

img

சிபிஎம் போராட்டம் சிறப்பு முகாம் நடத்தி பத்திரம், ஒதுக்கீடு ஆணை

சிபிஎம் போராட்டம்  சிறப்பு முகாம் நடத்தி பத்திரம், ஒதுக்கீடு ஆணை

சென்னை,செப்.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தை தொடர்ந்து சிறப்பு முகாம் நடத்தி பத்திரம், ஒதுக்கீடு ஆணை வழங்குவதாக தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு நல வாரிய அதிகாரி உறுதிய ளித்துள்ளார். பெரம்பூர் 36ஆவது வட்டத்திற்கு உட்பட்ட புதுநகர் பகுதியில் 370 குடியிருப்புகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு நல வாரியம் பராமரிப்பில் உள்ளது. சுமார் 270 வீடுகளுக்கு விற்பனை பத்திரம் வழங்க வலியுறுத்தியும், 100 வீடுகளுக்கு ஒதுக்கீடு ஆணை, பெயர் மாற்றம் மற்றும் விற்பனை பத்திரம் வழங்க வலியுறுத்தியும் கடந்த 2 ஆண்டுகளாக சிபிஎம் சார்பில் தொடர்ச்சி யான போராட்டங்கள் நடை பெற்றன. ஆனால் அதிகாரி கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் வியாழனன்று (செப்.25) சிபிஎம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு புதுநகர் பகுதியில் வசிக்கும் 350க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விற்பனை பத்திரம் வழங்க வேண்டும், பல முறை மனு அளித்தும் அசல் சான்றிதழ்களை தொலைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பல ஆண்டுகளாக குடி யிருக்கும் மக்களுக்கு பெயர் மாற்றம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும், நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட ரூ.320 ரசீது உள்ள வீடுகளுக்கு மனை ஒதுக்கீடு வழங்கி கிரயப் பத்திரம் வழங்க வேண்டும், விற்பனை பத்திரம் உள்ள அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகர்ப்புற மேம்பாட்டு நல வாரிய அலுவலகம் வியாசர்பாடி வட்டம் 2இன் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. பின்னர் மேற்பார்வை பொறியாளர் த.இளம் பருதியை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட இளம்பருதி அக்.10அன்று சிறப்பு முகாம் நடத்தி, அனைவரிடமும் மனுக் களை பெற்று உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் எல்.சுந்தர ராஜன். பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார். மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், நிர்வாகிகள் அ.நைனா முகமது, ஆர்.சுரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.