நிலக்கோட்டை சாதி ஆணவப் படுகொலை ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கு சிபிஎம் தீ ஒ முன்னணி தலைவர்கள் ஆறுதல்
திண்டுக்கல்,அக்.16- நிலக்கோட்டை அருகே சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் மனைவி ஆர்த்தி மற்றும் குடும்பத்தினரை சிபிஎம், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் பிரபாகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் செ.முத்துராணி, மாவட்ட தலைவர் ஜி.ராணி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வனஜா, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாலாஜி, அஜய் கோஷ், வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் துளசி ஸ்டாலின், நிலக் கோட்டை ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
