tamilnadu

img

விடுதி மாணவர்களை மூட்டை தூக்க வைத்த பள்ளி நிர்வாகி நடவடிக்கை கோரி சிபிஎம் புகார்

விடுதி மாணவர்களை  மூட்டை தூக்க வைத்த பள்ளி நிர்வாகி நடவடிக்கை கோரி சிபிஎம் புகார்

சிதம்பரம், அக்.15- அரசு உதவி பெறும் பள்ளி விடுதி யில் தங்கியிருந்த மாணவர்களை துணிக்கடைக்கு மூட்டை தூக்க வைத்த பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். காட்டுமன்னார்கோவில் நகரில் அரசு உதவி பெறும் பருவதராஜ குருகுலம் மேல்நிலைப்பள்ளி விடுதியுடன் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் காட்டு மன்னார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் பெற்றோர்களை இழந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட ஏழ்மை நிலை மற்றும் பெற்றோர்களை இழந்த மாண வர்கள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் நிர்வாகிக்கு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் சொந்த மாக விபிஎஸ் என்ற பெயரில் பிரமாண்ட ஜவுளிக்கடை உள்ளது. இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் நகரத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு விடுதியில் உள்ள மாணவர்களை இரவு நேரத்தில் அழைத்து வந்து துணி மூட்டைகளை இறக்கி அடுக்கிய சம்ப வம் நடந்துள்ளது. மாணவர்கள் சரக்கு வாக னத்தில் அழைத்து வரப்பட்டு துணி மூட்டை களை இறக்கி அடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காட்டுமன்னார்கோவில் வட்ட சிபிஎம் சார்பில் வருவாய் வட்டாட்சியர் பிரகாஷிடம் நகர செயலாளர் மணிகண்டன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில் வட்டச் செயலாளர் தேன்மொழி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டக்குழு உறுப்பினர் தனபால், கிளைச் செயலாளர் நீலமேகன், மணிகண்டன், கொளஞ்சி, சிறுகுரு விவசாய சங்க தலைவர் இதயத்துல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.