tamilnadu

img

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி மரணம்

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி மரணம்

கள்ளக்குறிச்சி, அக்.16 - கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூர் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஒப்பந்த ஊழியர் பிரவீன்குமார் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தைக் கண்டித்தும், பிரவீன்குமார் குடும்பத்தா ருக்கு நீதி கேட்டும், நிவாரணம் கேட்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் புதன்கிழமை (அக்.15) திருக்கோவிலூர் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சிஐடியு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகி கள், உயிரிழந்த பிரவீன் தாயார், சகோதரி மற்றும் குடும்ப உறவினர்கள், ஊர் பொது மக்கள் கலந்துகொண்டனர். உயிரிழந்த மின் ஊழியருக்கு நியாயம் கிடைக்கும் வரை பொறியாளர் அலுவலகம் முன்பு நியாயம் கேட்டு காத்திருப்பு போராட்டம் இரவு வரை  தொடர்ந்தது. அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தும் வரை இறந்தவரின் உடலை வாங்குவதில்லை என உறவினர்  கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். செயற்பொறியாளர் ரகுராமன் தலை மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டாத நிலையில் பேச்சு வார்த்தைக் குழுவினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். காத்திருப்பு போராட்டம் சாலை மறியலாக மாறி, திருக்கோவிலூர் முக்கிய சாலையில் அமர்ந்து பிரவீன் இறப்பிற்கு நியாயம் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் உட்கோட்டக் காவல் கண்காணிப்பாளர் போராட்டக் குழுவி னரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் நேரில் வந்து பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட தன் அடிப்படையில் மண்டல மேற்பார்வைப் பொறியாளர் ஏ.பாரதி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாகக் கூறியதன் அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்தது. மத்திய அமைப்பின் இடைவிடாத போராட்டத்தால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு கிடைத்ததற்கு பிரவீன் தாயார், சகோதரி, உறவினர்கள் கண்ணீர் மல்க தோழர்களுக்கு நன்றி தெரி வித்தனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டத் தலைவர் கே.சீனிவாசன் தலைமை தாங்கி னார். சிஐடியு ஒருங்கிணைப்பாளர் கே.விஜய குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.செந்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.ஏழுமலை, சிபிஎம் நகரச் செயலாளர் எம்.ஏழுமலை, வட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ஹரி,மின் ஊழியர் மத்திய அமைப்பு ஓய்வு பி.விருத்தகிரி, ஆர்.ஏழுமலை, கே.சலிம், ஆர்.ஐம்பதாயிரம், திருக்கோவிலூர் கோட்டப் பொருளாளர் எஸ்.சண்முகம், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டப் பொருளாளர் எஸ்.வெங்கடேசன், ஆர்.சந்திரராயர், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள், உயிரி ழந்த பிரவீன் குடும்பத்தார் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.