பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் கட்டுமான தொழிலாளர்கள் சங்க பேரவையில் தீர்மானம்
அரியலூர், செப். 22- அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை அச்சங்கத்தின் 24 ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நல வாரிய கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் உடனடியாக ரூ.2000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தீபாவளி பண்டிகை கால போனஸ் தொகை ரூ.5,000-ஐ ஒரு மாத காலத்துக்குள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி. சேப்பெருமாள் தலைமை வகித்தார். சிஐஎப்ஐ மாநில துணை பொதுச் செயலர் வி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் த. சகுந்தலா உள்ளிட் டோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக சங்க நிர்வாகிகள் பேரணியில் ஈடுபட்டனர்.