நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு
கரூர், செப். 12- தமிழக அரசால் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றுள்ள பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியனுக்கு, பள்ளியில் பாராட்டு விழாவும், ஆசிரியர் தினவிழா கொண்டாட்டமும் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் சா.மோகனரங்கன் தலைமை தாங்கினார், செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளியின் தாளாளர் அசோக் சங்கர், நல்லாசிரியர் விருது பெற்றுள்ள பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியனை பாராட்டி வாழ்த்தினார். இவ்விழாவில் பரணி வித்யாலயா முதல்வர் சு.சுதாதேவி வரவேற்றுப் பேசினார். எம். குமாரசாமி, கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி வாழ்த்துரை வழங்கினர். பரணி பார்க் முதல்வர் க.சேகர் நன்றி உரையாற்றினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர், துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
