tamilnadu

img

பிரதமரை சந்திக்க வாய்ப்பு மறுப்பு ஓபிஎஸ் - நயினார் நாகேந்திரன் இடையே முற்றிய மோதல்

பிரதமரை சந்திக்க வாய்ப்பு மறுப்பு  ஓபிஎஸ் - நயினார் நாகேந்திரன்  இடையே முற்றிய மோதல்

சென்னை, ஆக.3 - சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்த போதும், அவருக்கு பிரதமரை சந்திக்கும்  வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து  தனது ஆதரவாளர்களுடன் ஆலோச னையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், பாஜக  கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித் தார். இதுகுறித்து பேசிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தன்னிடம் சொல்லியிருந்தால் பிரத மரை சந்திக்கும் வாய்ப்பை ஓ.பன்னீர்செல்வத் துக்கு ஏற்படுத்திக் கொடுத்திருப்பேன்” என  தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த ஓ. பன்னீர்செல்வம், “நயினார் நாகேந்திரனை 6 முறை தொலைபேசியில் அழைத்தும் அவர் தனது அழைப்பை எடுக்கவில்லை” என குற்றம் சாட்டினார். ஆனால், தன்னையோ தனது உதவி யாளரையோ ஓ.பன்னீர்செல்வம் அழைக்க வில்லை என நயினார் நாகேந்திரன் பதி லளித்தார். பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல் வம் செய்தியாளர்களிடம் காண்பித்தார். கடந்த ஜூலை மாதம் 24 மற்றும் ஏப்ரல்  12 ஆகிய தேதிகளில் நயினார் நாகேந்திர னுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை அவர்  ஆதாரமாக வெளியிட்டார். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்தி ரன், “செல்போனில் காட்ட வேண்டாம், ஆதாரமாக கொடுங்கள்” என கூறினார். நயினார் நாகேந்திரன் பேச தயாரானபோது பிறகு பேசலாம் எனக் கூறி அண்ணாமலை அவரை அழைத்துச் சென்றதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். இவ்வாறாக இருவர்  இடையே கருத்து மோதல் முற்றி வருகிறது.