தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் மாணவர் பேரவை தேர்தல்களை நடத்துக!
அரசை வலியுறுத்தி எஸ்எப்ஐ மாநில மாநாட்டில் தீர்மானம்
திருப்பூர், ஆக. 23 - தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்க ளில் மாணவர் பேரவை தேர்தலை நடத்தி கல்வி நிலைய ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாடு வலியுறுத்தி உள்ளது. பிரதிநிதிகள் மாநாடு இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 27 ஆவது மாநாடு, வெள்ளிக்கிழமையன்று பேரணி - பொதுக்கூட்டத்துடன் துவங்கியது. சனிக்கிழமையன்று காலை செங்கப் பள்ளியில் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் (சொர்ண மஹால்) பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் துவக்கமாக, மாணவ - மாணவியரின் விண்ணதிரும் முழக்கங்களுக்கு இடையே, மாநிலத் தலைவர் தௌ. சம்சீர் அகமது வெண் கொடியை ஏற்றி வைத்து, மாநாட் டிற்குத் தலைமை வகித்தார். மாநாட்டைத் துவக்கி வைத்த ஸ்ரீஜன் பட்டாச்சார்யா! மாநிலத் துணைத் தலைவர் தே. சரவணன் அஞ்சலி தீர்மானத்தை முன் மொழிந்தார். வரவேற்புக் குழுத் தலைவர் ஆர். ஈஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். மாணவர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினார். ஏஐஎஸ்எப் மாநிலச் செயலாளர் தினேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலா ளர் அரவிந்தசாமி வேலை அறிக்கை முன் வைத்தார். அதன் மீது பிரதிநி திகளின் விவாதம் நடைபெற்றது. மதவாத சக்திகளின் தாக்கத்தை தடுப்போம்! இந்நிலையில் தான், “தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாண வர் பேரவை தேர்தலை நீண்ட காலமாக நடத்தாமல் இருக்கின்றனர். சாதி அடை யாள, மதவாத சக்திகள் மாணவர் சமு தாயத்தில் தாக்கம் செலுத்துவதை தடுக்க, அனைத்துக் கல்வி நிலையங்க ளிலும் ஜனநாயக பூர்வமாக மாண வர் பேரவை தேர்தலை நடத்த வேண் டும்” என்று ஒரு மனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.