தோழர் ஆர்.கஸ்தூரி நினைவு ஜோதி பயணம் போடியில் தொடங்கியது
தேனி, செப்.23- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாடு மார்த் தாண்டத்தில் புதன்கிழமை தொடங்குவதை முன்னிட்டு சங்கத்தின் ஸ்தாபகத் தலை வர்களில் ஒருவரான தோழர் ஆர்.கஸ்தூரி நினைவு ஜோதி பயணம் போடியில் தொடங்கியது . போடி தேவர் சிலை அருகே நடை பெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.கோமதி தலைமை வகித்தார். தோழர் ஆர். கஸ்தூரி நினைவு ஜோதியினை கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன் எடுத்து கொடுக்க, மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ். மீனா பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கே. சத்யா, மாவட்ட பொரு ளாளர் ஐ.சித்திகா பர்வீன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.வெண்மணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். சுதா, பி .சாந்தி, எஸ்.ஈஸ்வரி, போடி தாலுகா தலைவர் ஆர்.தனலட்சுமி விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.பாண்டியன், மாவட்டச் செயலாளர் டி.கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஜி.எம். நாகராஜ், சிபிஎம் தாலுகா செயலாளர் சி. முனீஸ்வரன், மகா லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.