தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் மதுரையில் இலவச சட்ட உதவி முகாம்
மதுரை, அக்.5- தீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுரை மாநகர் மாவட்டக்குழுவின் சார்பில், பொதுவுடமை இயக்கப் புரட்சியாளர் தோழர் பி.சீனிவாசரா வின் 64ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று பெரியார் பேருந்து நிலையம் அருகே மாபெரும் இலவச சட்ட உதவி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்டத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் த.செல்லக் கண்ணு முகாமை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பெ.ஆ.மாரிக்கனி, புற நகர் மாவட்டச் செயலாளர் எம்.கண்ணன், மாநகர் மாவட்ட பொரு ளாளர் என்.ஜான் மைக்கேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். இம்முகாமில் உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் நிபுணத்துவ வழக்க றிஞர்கள் பங்கேற்று, பொதுமக்க ளிடமிருந்து வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் மனுக்கள் பெற்றனர். இதில் அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்க மாநில குழு உறுப்பி னர்கள் டி.சீனிவாச ராகவன், கே. வாமனன், எஸ்.எம்.மோகன் காந்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். மகேந்திரன், உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் எஸ்.பாரதி, கே. ஆனந்த், ஜி.ராஜேஷ், ஜி.கருப்ப சாமி ஆகியோர் பொது மக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.
