தோழர் என்.சங்கரய்யா 104ஆவது பிறந்த நாள் மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கல்
என்.சங்கரய்யா 104ஆவது பிறந்தநாளில் 104 சந்தா வழங்கல் இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய் யாவின் 104ஆவது பிறந்த நாளான செவ்வாயன்று (ஜூலை 15) குரோம்பேட்டையில் சிறப்பு பேரவை நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம், முதற்கட்டமாக மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி 47 சந்தாக்களையும், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமோதரன் 25 சந்தாக்களையும், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா 35 சந்தாக்களையும் வழங்கினர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ஏ.பாக்கியம், ச.லெனின், ஜி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சரஸ்வதி எம்.சி., எம்.சி.பிரபாகரன், எஸ்.ஜெயசங்கரன், ஆர்.விஜயா மற்றும் ஜி.விஜயலட்சுமி எம்.சி. உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.
தோழர் என்.சங்கரய்யா 104ஆவது பிறந்த நாள் உறுதிமொழியேற்பு மற்றும் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு நிகழ்வு செவ்வாயன்று (ஜூலை 15) ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம், பகுதிக்குழு சார்பில் 47 சந்தாக்கள் வழங்கப்பட்டது. பகுதிக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி., பகுதிக்குழு உறுப்பினர்கள் மகேஷ், அம்புரோஸ், கிளைச் செயலாளர்கள் சண்முகம், ஜோதிபாசு, யசோதா உள்ளிட்டோர் பேசினர்.