tamilnadu

img

எழுச்சியின் சின்னம் எம்.ஆர்.வி.!

தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கம்பீரமான தலைவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என இரண்டிலும் மாநிலச் செயலாளராக சிறப்பாகச் செயல்பட்டவர். சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் பகுதிகளை ஐக்கிய தமிழகம் ஆக உருவாக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு என பெயரிட வேண்டும் என்றும் நடந்த இயக்கத்தில் முன்னின்ற வர். அதனால் காவல்துறையின் தடியடிக்குள்ளாகி மண்டை உடைந்து ரத்தம் சிந்தியவர். தமிழின் சிறந்த பத்து நாவல்களில் ஒன்றாகத்  திகழும் பஞ்சும் பசியும் நாவலின் மூலம் எம்.ஆர்.வி. எழுதிய நெல்லை மாவட்ட நெசவுத் தொழில் பற்றிய குறிப்புகளேயாகும். தீக்கதிர் நாளிதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாள ராகவும் விளங்கியவர். எளிமையும் வலிமையும் நிறைந்த  மக்கள் தலைவர். இளம்தலைமுறையினர்க்கு என்றென்றும் எடுத்துக்காட்டாகவும் எழுச்சியின் சின்னமாகவும் விளங்குபவர் தோழர் எம்.ஆர்.வி.!

;