tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

வாட்ஸ்அப் அழைப்பில் 3 புதிய அப்டேட்கள்!

வாட்ஸ்அப் அழைப்பில் (Whatsapp Call) ஆடியோ உடன் ஸ்கிரீனை பகிரும் (Screen Sharing) வசதி உட்பட 3 புதிய அப்டேட்கள் வெளியாக உள்ளன.

போன் செயலி அல்லது டெஸ்க்டாப்பில் மேற்கொள்ளப்படும் வாட்ஸ்அப் அழைப்பு களின் அனுபவத்தை மேம்படுத்த, ஆடியோ உடன் ஸ்கிரீனை பகிரும் (Screen Sharing) வசதி, வீடியோ அழைப்புகளில் அதிக நபர்கள் பங்கேற்கும் வசதி மற்றும் ஸ்பீக்கர் ஸ்பாட்லைட் (Speaker Spotlight) ஆகிய அப்டேட்கள் வெளியாக உள்ளன.

வாட்ஸ்அப்பில் ஸ்கிரீனை பகிரும் வசதி கடந்த ஆகஸ்ட் 2023-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய அப்டேட்டில் பயனர்கள் தங்கள் ஸ்கிரீனை ஆடியோவுடன் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். வீடியோ அழைப்புகளில் அதிகபட்சமாக 32 நபர் வரை பங்கேற்கும் வகையில் அப்டேட் வழங்க இருக்கிறது. அதேபோல் வாட்ஸ்அப் அழைப்பில் பேசுபவரின் ஸ்பீக்கர் தானாகவே ஹைலைட் செய்யப்பட்டு, ஸ்கிரீனில் முதலில் தோன்றும் வகையில் அப்டேட் வழங்க இருக்கிறது. 

ஐபோனில் லைவ் வாய்ஸ் மெயிலை டெக்ஸ்ட் வடிவில் பெறும் வசதி!

ஆப்பிள் ஐபோனில் வாய்ஸ் மெயில் களை டெக்ஸ்ட் (Text) வடிவில் பெறும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோனில் வாய்ஸ் மெயில் ஆப்ஷனை enable செய்தால், வரும் அழைப்புகளுக்கு ஐபோனே பதிலளித்து வாய்ஸ் மெயில் மூலமாக குரல் வடிவில் மெசேஜ்களை பெற்று கொள்ளும். இந்த அம்சம் முதலில், ஐ.ஓ.எஸ் 17ஆவது வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டது.  வாய்ஸ் கால்களை வாய்ஸ் மெயிலாக மாற்றப்படும் ஐபோன் கருவியில் இந்த குரல் வடிவிலான மெசேஜ்கள் சேமித்து வைக்கப்படும். தற்போது, ஐ.ஓ.எஸ் 18-இல் வழங்கப்பட்டுள்ள லைவ் (live) வாய்ஸ் மெயில் வசதியில் குரல் மெசேஜ்கள், டெக்ஸ்ட் (Text) வடிவில் பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளுக்கு ரிங் (Ring) வராமல் நேரடியாக வாய்ஸ் மெயிலுக்கு மாற்றும் “Silence Unknown Callers” அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. 

எக்ஸ் தளத்தில் ‘ப்ரைவேட் லைக்ஸ்’ அம்சம்!

எக்ஸ் தளத்தில் பயனர்கள் விரும்பும் பதிவுகளுக்கு தனிப்பட்ட முறையில் லைக் செய்யும் ‘பிரைவேட் லைக்ஸ்’ (Private Likes) அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

இந்த அம்சம் மூலம் பதிவுகளுக்கு வரும் லைக்குகளை (Likes), பதிவிட்டவரும், அதனை லைக் செய்தவரும் மட்டுமே பார்க்க முடியும். மற்றவர்கள் பார்க்க முடியாத வகையில் மற்றம் கொண்டுவரப்பட உள்ளது. தனிப்பட்ட நபரை தாக்கும் சம்பவங்களை குறைக்கும் நோக்கில் ‘லைக்’ செய்யும் வசதியை பிரைவேட் ஆக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஏற்கனவே எக்ஸ் சந்தா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அனைவருக்கும் இந்த வசதி வழங்கப்பட உள்ளது. 
 

;