districts

img

நூறு நாள் வேலை கேட்டு மனு

தஞ்சாவூர், ஜூன் 15-  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வடக்கு ஒன்றியம் பாதிரக்குடி ஊராட்சியில், நூறு நாள் வேலையை உடனே துவக்கி, தொழிலாளர்களுக்கு வேலை வழங்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் பூமிநாதன் மனுவை பெற்றுக் கொண்டார். 

இதேபோல், பூதலூர் வடக்கு ஒன்றியம் மாறனேரி ஊராட்சியில் நூறு நாள் வேலை கேட்டு, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.உதயகுமார் தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது. 

இரு நிகழ்வுகளிலும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

;