tamilnadu

img

பள்ளிக் கல்வியில் உண்மையான மதிப்பீடு சாத்தியமா? - க.சரவணன், தலைமையாசிரியர்

நவீன தொழில்நுட்ப சகாப்தத்தில் செல்போன்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. இருப்பினும், கல்வி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சில சவால்களை எதிர்கொள்கின்றனர். அதில் முக்கியமானது மோசமான நெட்வொர்க் இணைப்பு . இதனைச் சரிசெய்யும் வகையில் மே 2024 கோடை விடுமுறையில் ஒவ்வொரு அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இண்டர்நெட் இணைப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இச்செயல் பாராட்டுக்குரியது. இதுபோல் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அரசின் பல சலுகைகள் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இப்படியே போனால், மெல்ல மெல்ல அரசு உதவிபெறும் பள்ளிகள் சாவை எதிர்கொள்ளும். (உ.ம். காலை உணவுத் திட்டம்)

தொழில்நுட்பச் சிக்கல்கள

செல்போன் செயலி(APP)யைக்கையாளும் போது தொழில்நுட்பச் சிக்கல்கள் அவ்வப்போது  ஏற்படுகின்றன. இருப்பினும், அவை உடனடியாக வும், இரண்டு அல்லது மூன்று நாட்களிலும் சரி செய்யப்படுகின்றன. மேலும், செயலி சரிசெய்யப் பட்டவுடன் பணிகளை முடிப்பதற்கான கால அவகாச மும் நீட்டிகப்படுகிறது. இப்படி பல அடிப்படை சிக்கல்கள் தீர்க்கப்பட்டாலும், ஆசிரியரும், மாணவ ரும் சந்திக்கும் பெரும் சவாலாகச் செல்போன் மூலம்  மேற்கொள்ளப்படும் தொடர் மதிப்பீட்டு முறை இருந்துவருகின்றது. இதுவும் ஆராயப்பட்டு , களையப்பட வேண்டும். 

மதிப்பீடு ஏன் மேற்கொள்ளப்படுகிறது? 

*    சிரமம் உள்ள மாணவர்களைக் கண்டறிவதற்கு
*    சிரமங்களைக் களைய புதிய கற்பித்தல் முறையை பயன்படுத்துவதற்கும்

அதாவது, மாணவர்களின் செயல்திறன் மற்றும்  முன்னேற்றத்தை அறிய மதிப்பீடு உதவுகிறது. இது ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் பலம்  மற்றும் பலவீனங்களைத் தீர்மானிக்கவும், முன்னேற்  றம் தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காண வும், அதற்கேற்ப அவர்களின் கற்பித்தல் முறை களை மாற்றவும் அனுமதிக்கிறது. இந்த மதிப்பீடு  பாடநெறி முழுவதும் மாணவர்களின் கற்றலைக் கண்காணிக்கவும், மதிப்பிடவும் பயன்படுகின்றது. இது அறிவு அல்லது புரிதலில் உள்ள இடைவெளி களைக் கண்டறிய உதவுகிறது. 

எதிர்கொள்ளும் சவால்கள்

கற்றலை மேம்படுத்துவதற்கும், கல்வி வெற்றி யை உறுதி செய்வதற்கும் பள்ளிக்கல்வித்துறை தொடர் மதிப்பீடு செயல்பாடுகளில் ( FA (b) மதிப்பீடு)  செல்போன் பயன்படுத்தித் தேர்வு எழுதுவதில் உள்ள சிரமங்களைக் களைய தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடுவது அவசியம். குறிப்பாக,

*    அதிக மாணவர்கள் உள்ள வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தித் தேர்வு நடத்து வதில்/ கையாள்வதில் உள்ள சவால்கள்.

*    வாசிக்கத் தெரியாத மாணவர்கள் செல்போன் பயன்படுத்தித் தேர்வு எழுதுவதில் உள்ள சவால்கள். *    தேர்வு எழுதிய மாணவர்கள் சக மாணவர்களு டன் கேள்விகளையும், அதற்கான விடை களையும் பகிர்வதால் மதிப்பீட்டின் உண்மை தன்மையில் ஏற்படும் சவால்கள்.

*    சக மாணவர்களின் உதவியுடன் தேர்வு கை யாளும் போது மதிப்பீட்டின் உண்மைத்தன்மை யில் ஏற்படும் சவால்கள்.

 *    கொள்குறி வினாக்கள் கையாள்வதில் ஏற்படும் சவால்கள்.

*    திறந்த வகை வினாக்களுக்குப் பதில் அளிப்ப தில் பயிற்சியின்மையால் ஏற்படும் சவால்கள்.

*    வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன் களை மதிப்பீடு செய்வதில் ஏற்படும் நேர மேலாண்மையில் உள்ள சவால்கள்.

*    செயலிழந்த செல்போன்கள் அல்லது சாதனங்களினால் ஏற்படும் சவால்கள்

இலக்கை அடைய உதவும்  மாணவர் ஆசிரியர் விகிதம்

முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள வகுப்பறையில் செல்போன் பயன் படுத்தித் தேர்வு எழுதும்போது ஆசிரியர் மாணவர்களைக் கையாள்வதில் சிரமங்கள் உள்ளன. மேலும், தேர்வு எழுதாத, தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்களைக் கை யாள்வதில் உள்ள சவால்கள் ஆராய்ச்சிக்கு  உட்பட்டவை. ஆசிரியர் மாணவர் விகிதம்  மாற்றம் காணப்படுவதன் மூலம் இச்சிக்கல்  தீர்க்கப்படலாம். 1: 20 நடைமுறைப்படுத்து வது, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யும் முறைக்கு உகந்ததாகும். நிர்ணயித்த கல்வி இலக்கை அடைவதற்கு உதவும்.  ஒவ்வொரு மாணவர்களுக்கும் மாறு பட்ட கேள்விகளும், கொள் குறி வினாக்களில்  பதில்களின் வரிசை மாற்றம் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டாலும், தேர்வு எழுதிய மாண வர்கள் சக மாணவர்களுடன் கேள்விகளைப் பகிர்வதன் மூலம் முன்கூட்டியே கேள்வி களை அறிந்து வைக்கின்றனர். அதேபோல் பதில்களையும் தெரிந்து வைத்துள்ளனர். இது உண்மையான மதிப்பீட்டைப் பாதிக்கி றது. மாணவர்களின் உண்மையான நிலை யை அறிய உதவுவதில்லை.  அதேபோல், ஆசிரியருக்கு ஆசிரியர் பயன்படுத்தும் செல்போன்களில் வித்தி யாசம் உள்ளது. சில செயலிழந்த சாத னங்களை பயன்படுத்தும்போது செயலி வேலை செய்வதில்லை. அதனால், ஆசிரி யருக்கும் மாணவர்களுக்கும் விரக்தி ஏற்படு கிறது. ஒவ்வொரு ஆசிரியருக்கும் மேம் பட்ட செல்போன் வழங்குதன் மூலம் இப்பிரச்ச னையைத் தீர்க்கலாம். அதற்கான நிதி ஒரு  பெரும் சவால் ஆகும்.

திறன் மதிப்பீடும், கால அவகாசமும்

வாசித்தல், எழுதுதல் திறன்கள் அவசி யம் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். கற்றல் கற்பித்தல் செயல் நடைபெறும்போதே வாசிக்க மற்றும் எழுதத் தெரியாத மாண வர்களை ஆசிரியர்கள் அடையாளம் கண்டு  வைத்திருப்பார்கள். வாரம் வாரம் பொதுத்  தன்மையான தேர்வு முறை கடைப்பிடிக் கப்படுகிறது. அம்மாணவன் குறிப்பிட்ட திறன்  அடைந்து இருக்க மாட்டான். அப்படிப்பட்ட மாணவர்கள் செல்போன் பயன்படுத்தி மதிப்பீடு செய்யும் பட்சத்தில் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை. ஆனால், அவர்கள் கொள் குறி வினாக்களுக்கு, ஏதோ ஒரு விடை யைத் தேர்வு செய்யும் போது சில சம யங்களில் மதிப்பெண் பெற்று விடுகின்றனர்.  இதுவும், மதிப்பீட்டின் உண்மைத் தன்மை யைப் பாதிக்கிறது. இதுபோன்ற மாண வர்களுக்கு ஆசிரியர் குறைதீர் கற்பித்தல் முறையைப் பயன்படுத்தி மீண்டும் கற்பித்து, அத்திறன்களை பெற்றபின்பு, அத்தேர்வை மேற்கொள்ளலாம். அதற்கான  அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். Absent, long absent, cswn என கொடுப்பது  போல், yet not attain எனக் கொடுத்து ,  அவர்களை மதிப்பீடு செய்ய குறிப்பிட்ட கால  அவகாசம் தரலாம். பொதுவாக, தொடர் மதிப்பீடுகள் மாண வர்களின் கற்றல் நிலையை அறியவும், குறைந்தபட்ச கற்றல் அடைவு ஏற்படு வதற்கும் உதவுகிறது. மேற்கண்ட இச்சவால் கள் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் எரிச்சல், பயம், குழப்பம், விரக்தி ஆகிய வற்றை ஏற்படுத்திவிடுகிறது. அது உண்மை யும்கூட. மேலும், குறிப்பிட்ட கால அவ காசத்தில் தேர்வு முடிக்கப்பட வேண்டும் என்பதால் பல இடங்களில் ஆசிரியரோ / முழு மையான அடைவுத்திறன் பெற்ற மாண வரோ பல மாணவர்களின் தேர்வை எழுது பவராக உள்ளார்!? ( நாஸ், சிலாஸ் தேர்வு முடி வுகள் சாட்சி) இது வருத்தமளிக்கும் செயல்.  இதன் உண்மைத்தன்மையை அறிய எந்த தொழில்நுட்பத்தைப்பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தப் போகிறது?!




 

;