பனை மரங்களை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்
சென்னை, செப். 18 - பனை மரங்களை பாதுகாப்பது சுற்று ச்சூழல் சமநிலைக்கும் பொருளாதாரத் திற்கும் பாரம்பரியத் திற்கும் முக்கிய மானது. பனை மரங்கள் வறட்சியைத் தாங்கி வலுவாக நிற்பதுடன், பனை வெல்லம், பாய் உள்ளிட்ட பல பொருட்களை தந்து, விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வருகிறது. புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது நிலச்சரிவைத் தடுப்பதிலும் பனை மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், ‘உழவர் செயலி’யில் விண்ணப்பிக்க வேண்டும். வெட்டப்பட்ட பனை மரங்களை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும் போது, அனுமதி கடிதம் காட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.