tamilnadu

“போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க ஆட்சியர் அழைப்பு

“போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க ஆட்சியர் அழைப்பு

அரியலூர் அனிதா நினைவரங்கத்தில்

அரியலூர், ஆக. 10-  அரியலூர் அனிதா நினைவு அரங்கத்தில் “போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு’’ விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க பள்ளி, தொழிற்பயிற்சி, கல்லூரி மாணவ-மாணவிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற நிலையை உருவாக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆக. 11 (திங்கட்கிழமை) அன்று போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக மாபெரும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க உள்ளார்.  அதனைத் தொடர்ந்து, அதேவேளையில் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள அனிதா நினைவு அரங்கத்தில், போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்படவுள்ளது.  இந்நிகழ்ச்சியில் பள்ளி, தொழிற்பயிற்சி, கல்லூரி மாணவ-மாணவிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் அனைவரும் மேற்படி உறுதி மொழியை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.  மேலும் https://drugfreetamilnadu.tn.gov.in/en#pledge என்ற இணையதள முகவரி மூலம் “போதைப் பொருட்களுக்கு எதிர்ப்பு உறுதிமொழி” மேற்கொண்டு அதற்கான சான்றிதழை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.