சாரண, சாரணியர் இயக்க கிழக்கு மண்டல திரளணி நிறைவு விழா
தஞ்சாவூர், செப்.2 - தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு எம்எம்ஏ மேல் நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க கிழக்கு மண்டல திரளணி (காம்பூரி) நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் மாதவன் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் மதிவாணன் (பட்டுக் கோட்டை), அய்யாக்கண்ணு (தஞ்சா வூர்), செந்தில் (தனியார் பள்ளிகள்), எம்எம்ஏ பள்ளி தாளாளர் எஸ்.சஞ்சய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் ச.முரசொலி பங்கேற்று பேசினார். முன்னதாக, மாநில அமைப்பு ஆணை யர் கோமதி வரவேற்றார். தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சந்திரமெளலி நன்றி கூறினார். வட்டார கல்வி அலுவலர்கள் சங்கீதா, லதா, தமிழ்வாணன், இள வேணி, வெஜினா, பள்ளித் துணை ஆய்வாளர் ஜேக்கப் வினோத், ஆசிரி யர்கள் அருள்ராஜன், சக்திவேல், ஜேர்ஆர்சி திருச்சி மண்டல மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் பிச்சுமணி, எம்எம்ஏ பள்ளி சாரண ஆசிரியர்கள் ராஜரெத்தினம், செந்தா மரைச் செல்வி, தேவேந்திரன், மேல் நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரி யர் ராஜவேல், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த ஆக.30 அன்று துவங்கி, செப்.1 ஆம் தேதி நிறைவடைந்த, இந்தத் திரளணியில், 6 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 610 சாரண, சாரணிய மாணாக்கர்கள், 105 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.