மதுரை மாநகர் சாலையோர வியாபாரிகளின் விடிவெள்ளியாக சிஐடியு சங்கம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க மது ரையின் வீதிகள், சங்க கால ‘நாலங்காடி’, ‘அல் லங்காடி’ மரபின் தொடர்ச்சியாக இன்றும் வணிக மையமாக விளங்குகின்றன. நான்கு மாசி வீதிகள், சித்திரை வீதி போன்ற இடங்களில் பல தலைமுறை யாக வியாபாரம் செய்துவரும் சாலையோர வியாபாரிகள், மதுரையின் அடையாளமாகவே திகழ்கின்ற னர். பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட வியாபா ரிகள் நகரத்தின் பொருளாதாரச் சுழற்சியில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இவர்களின் உழைப்பால் மட்டுமே நகரின் வணிகச் சுழற்சி குளிர்ந்திருக்கிறது. உரிமைகளைப் பெற்ற சிஐடியு-வின் சட்டப் போராட்டம் காவல்துறை தொந்தரவு, மாநகராட்சி நடவடிக்கைக ளுக்கு எதிராக வியாபாரிகளின் உரிமையைக் காக்கும் சக்தி யாக இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) திகழ்கிறது. மது ரையில் “சாலையோர மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம்” எனும் பெயரில் கடந்த 20 ஆண்டுகளாகப் போராடி வருகிறது. சிஐடியுவின் தொடர் முயற்சியால், ‘சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்டம் – 2014’ அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் ‘வென்டிங் கமிட்டி’ (Vending Committee) உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவில் வியாபாரிகள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்கள் பிரச்சனைகளை நேரடியாக அதிகாரிகளிடம் முன்வைக்கும் உரிமையைப் பெற்றனர். இச்சட்டத்தின்படி, வியாபாரம் செய்யக்கூடிய இடத்தை முடிவு செய்யும் வரை தொழிலாளர்களை அகற்றக்கூடாது என 2015 முதல் 2025 வரை பத்து உத்தரவுகளைச் சங்கம் பெற்றுத் தந்துள்ளது. மேலும், 2014 சட்ட புத்தகத்தை அதிகாரி களுக்கு வழங்கி, ‘சாலையோர வியாபாரிகளுக்கும் சட்டப் பாதுகாப்பு உண்டு’ என்பதைச் சங்கம் உணர்த்தியுள்ளது. கடன் உதவிகள் மற்றும் அங்கீகாரம் 2019-ல் நடைபெற்ற வென்டிங் கமிட்டி தேர்தலில் சிஐடியு சார்பில் போட்டியிட்ட 6 பேரும் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு மாநகராட்சியால் தனி அலுவலகம் வழங் கப்பட்டு, வியாபாரிகளின் பணிகள் அங்கிருந்து நடக்கின் றன. மேலும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் அவர்கள் முயற்சியில் நடத்தப்பட்ட கடன் முகாம் மூலம், 1,243 பேருக்கு ரூ.6.98 கோடி மதிப்பில் பெரிய மற்றும் சிறிய வண்டிகளும், 24,247 பேருக்கு ரூ.9.29 கோடி மதிப்பில் வட்டியில்லா கடன்களும் வழங்கப்பட்டன. இந்தப் போராட்ட வரலாற்றின் தொடர்ச்சியாக, சாலை யோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உரிமைகளை வலுப்படுத்தவும், தமிழகம் தழுவிய முதல் மாநில அளவிலான சம்மேளன மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. தமிழகமெங்கும் சிஐடியு கொடியின் கீழ் சாலையோர வியாபாரிகளை ஒன்றிணைப்போம் - ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம்.
