கங்கைகொண்டான் ஏடிசி டயர் கம்பெனியில் சிஐடியு முயற்சியால் 35 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி ஆணை
திருநெல்வேலி, ஜூலை 1 - சிஐடியு முயற்சியால் கங்கை கொண்டான் ஏடிசி டயர் கம்பெனியில் 35 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தர பணிக்கான ஆணை வழங்கப் பட்டது. ஒன்றிய பாஜக அரசின் தொழிலா ளர் விரோதப் போக்கின் காரணமாக இந்தியா முழுவதும் அரசு நிறுவனங் களிலும் தனியார் நிறுவனங்களிலும் நிரந்தர தொழிலாளர்கள் நியமனம் இல்லாமல், ஒப்பந்த தொழிலாளர் களாக வேலைக்கு அமர்த்தும் நிலை உள்ளது. இதனை எதிர்த்து சிஐடியு உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற் சங்கங்களும் ஜூலை 9 ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்து கின்றன. இந்நிலையில்தான் 2020 ஆம் ஆண்டு சிஐடியு தொழிற்சங்கத்திற் கும் திருநெல்வேலி கங்கைகொண் டான் ஏடிசி டயர் கம்பெனி நிர்வாகத்திற் கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படை யில், 2023 ஆம் ஆண்டு (அப்ரண் டிஸ்) வேலை பழகுநர்களாக நியமிக்கப் பட்ட 35 ஒப்பந்தத் தொழிலாளர் களுக்கு நிரந்தரப் பணிக்கான ஆணை வழங்கப்படாமல் இருந்தது. மீண்டும் சிஐடியுவின் பெரும் முயற்சியின் கார ணமாக 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிரந்தர தொழிலாளர் களுக்கான உத்தரவு கம்பெனி நிர்வாகத்தால் ஜூன் மாதம் வழங்கப் பட்டது. நிரந்தரப் பணிக்கான ஆணையை பெற்ற 35 தொழிலாளர்கள் சிஐடியு-க்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சங்கர் நகர் லெனின் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சங்கத்தின் தலைவர் கொம்பையா தலைமை வகித் தார். பொதுச் செயலாளர் ராஜகோ பால் முன்னிலை வகித்தார். சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கரு மலையான், சங்கத்தின் செயல் தலை வர் ஆர்.மோகன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில் துணைப் பொதுச் செயலாளர் சக்திவேல், சின்னத்துரை, பொருளாளர் விநாயகம், துணைத் தலைவர் சுடலைராஜ் மற்றும் நிர்வாகி கள் வெங்கடாசலம் கண்ணபிரான், ராமர், முருகன், சுபாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.