புதுக்கோட்டை சிப்காட்டில் குழந்தைகள் காப்பகம்
புதுக்கோட்டை சிப்காட்டில் புதிய குழந்தைகள் காப்பகத்தினை திங்கள்கிழமை முதல்வர் திறந்து வைத்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே. செல்லப்பாண்டியன், திட்ட அலுவலர் (சிப்காட்) ஜி.பாலமுரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
