90 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிப்பு அடுத்த மாதம் முதலமைச்சர் வழங்குகிறார்
சென்னை, செப்.24 - 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான 90 கலைமா மணி விருதுகளை அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்று தமிழ்நாடு அரசு புதன்கிழமை (செப்.24) அறிவித்துள்ளது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். விருது பெறுபவர்களுக்கு 3 சவரன் எடை யுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும். சிறப்பு விருதுகளான பாரதி யார் விருது (இயல்) முனைவர் ந. முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசு தாஸுக்கும், பாலசரசுவதி விருது (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம் மாளுக்கும் வழங்கப்படும். இந்த அகில இந்திய விருது பெறுவோ ருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் 3 சவரன் எடையுள்ள தங்கப்பதக்கம் வழங்கப்படும். சிறந்த கலை நிறுவனமாக தமிழ் இசைச் சங்கம் சென்னை (ராஜா அண்ணாமலை மன்றம்) மற்றும் சிறந்த நாடகக் குழுவாக கலைமாமணி எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றம், பால மேடு, மதுரை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவர்களுக் கும் தலா ரூபாய் 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத், லிங்கு சாமி, மணிகண்டன் உள்பட பல திரைக் கலைஞர்களும் கலை மாமணி விருதுகளைப் பெறு கிறார்கள். விருது வழங்கும் விழா அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.