இன்று சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (செப்.8) அதி காலை சென்னை திரும்புகிறார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார பயணமாக அவர் கடந்த ஆக.30 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டார். முதலில் ஜெர்மனி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர் களுடனும், முதலீட்டாளர்களுடனும் ஆலோசனை நடத்தி னார். இதைத் தொடர்ந்து, லண்டன் நகருக்குச் சென்ற அவர், முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண் டார். இந்துஜா குழுமம் உள்பட பல்வேறு பெருந்தொழில் நிறு வனங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனைகளை நடத்தி முதலீடுகளை ஈர்த்தார். இரு நாடுகளிலும் மேற் கொண்ட பயணத்தின் மூலமாக ரூ.15,516 கோடி முதலீடு கள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், 17,613 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித் துள்ளது. இந்தப் பயணங்களை நிறைவு செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவர் செய்தியா ளர்களைச் சந்தித்து தனது வெளிநாட்டுப் பயணம் குறித்து விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் பதிவு இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஜெர்மனி யில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய பயணம், லண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழி யனுப்ப நிறைவுறுகிறது. அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். “இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக் கொண்ட தமிழ் சொந்தங்களுக்கு என் அன்பை நன்றி யாய் நவில்கிறேன்” என்றும் முதலமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங் கோட்டையனை கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “செங்கோட் டையனுக்கு முழு ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம். அவர் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் எனது வாழ்த்துகள். 10 நாள்கள் அவகாசம் நிறைவடைந்த பிறகு அவர் அழைத்து பேசுவார் என நினைக்கிறேன். அதன் பின்னர், உறுதியாக சந்திப்பேன்” என்று தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் எம்.பி., சத்தியபாமா நீக்கம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட் டையன், கட்சித் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்த நிலை யில், கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். அவ ருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த திருப்பூர் தொகுதி முன் னாள் எம்.பி.,யான சத்தியபாமாவும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பு களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக, எடப்பாடி பழனி சாமி கையெழுத்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நலச் சங்க மாநில செயற்குழு கூட்டம்
பெரம்பலூர், செப். 7- மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நலச் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் பெரம்பலூரில் சனிக் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். கோட்ட பொறுப்பாளர்கள் ராமர், வெங்கடேசன், அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கவுரவ தலைவர் விஷ்ணுதேவன், மாநில செயற்குழு உறுப்பினர் கள் சிவப்பிரகாசம், ஜெயராமன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், வாழ்வாதார ஓய்வூதியம் மாதம் 5 ஆயிரம் வழங்க வேண்டும். கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் கிராமிய அஞ்சல் ஊழியராக பணியமர்த்தப் பட்டவர்கள், பழைய ஓய்வூதியம் பெற உரிமை பெற்றவர்கள் 30 ஆயிரம் பேருக்கு நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கோட்ட பொறுப்பாளர்கள், பணி ஓய்வுபெற்ற கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாநிலச் செயலாளர் ராஜு வரவேற்றார். மாநில பொருளாளர் ராம லிங்கம் நன்றி கூறினார்.
4 மாநாடுகள் நடத்த பாஜக திட்டம்
மதுரை: மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலை வர் நயினார் நாகேந்திரன், “அதிமுக - பாஜக கூட்ட ணிக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழகத்தின் நான்கு மூலைகளிலும் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த தமிழக பாஜக திட்ட மிட்டுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பிரம்மாண்ட மாக மாநாடு நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த மாநாடுகளில் பிரதமர் மோடி பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக” தெரிவித்தார்.