ரூ. 432 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மயிலாடுதுறையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
சென்னை, ஜூலை 16 - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதனன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார். அப்போது, ரூ.48.17 கோடியில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ.113.51 கோடி மதிப்பீட்டிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.271.24 கோடி மதிப்பி லான அரசு நலத்திட்ட உதவிகளை 54,461 பயனாளி களுக்கு வழங்கினார். திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் 8 இடங்களில் மேல் நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.12.26 கோடி செலவில் வகுப்பறைக் கட்டடங்கள் அடங்கும். வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் செம்பனார்கோவில் மற்றும் தரங்கம்பாடி ஆகிய இடங்களில் ரூ.3.75 கோடி செலவில் சார் பதி வாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. உயர்கல்வித் துறை சார்பில் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.4.40 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் மற்றும் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. சீர்காழி வட்டம் புத்தூரில் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.3.40 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நான்கு இடங்களில் ரூ.2 கோடியில் பொது அலகு கட்டடங்கள், எட்டு இடங்களில் ரூ.2.45 கோடி செலவில் துணை சுகாதார நிலையங்கள், நான்கு இடங்களில் ரூ.3.80 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சீர்காழி அரசு மருத்துவமனையில் ரூ.60 லட்சம் செலவில் கண் அறுவை சிகிச்சை பிரிவுக் கட்டடம் அமைக்கப் பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பல்வேறு இடங்களில் பொது விநியோகக் கடை, வகுப் பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடம், உணவு தானியக் கிடங்குகள், அங்கன்வாடிக் கட்டடங்கள், கிராம செயலகங்கள், ஊராட்சி அலுவலகக் கட்டடம், பாலம், இ-சேவை மையக் கட்டடம் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் குத்தாலத்தில் ரூ.3.20 கோடி செலவில் 1000 மெட்ரிக் டன் கொண்ட சேமிப்புக் கிடங்கு அமைக்கப் பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை சார்பில் மாப்படுகை-கடலங்குடி சாலை யில் பழவாற்றின் குறுக்கே ரூ.7.27 கோடி யில் பாலம் கட்டப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டப் பணிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மூன்று பேரூராட்சிகளில் அறிவுசார் மையம், விலங்குகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம், தார்சாலைப் பணிகள் ஆகியவை அடங்கும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பொறையாறு அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் மற்றும் சித்தர்க்காட்டில் அரசு நோய் தடுப்பு மருந்து கிடங்கு அமைக்கப்படும். நீர்வளத் துறை சார்பில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் மூன்று இடங்களில் கடைமடை நீரொழுங்கிகள் அமைக்கப்படும். காவிரி ஆற்றின் குறுக்கே நீர் செல்லும் திறனை மீட்டெடுக்க புதிய படுக்கை அணை கட்டப்படும். மயிலாடுதுறை நக ராட்சியில் புதிய அலுவலகக் கட்டடம் மற்றும் சீனி வாசபுரத்தில் மண் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும். அரசு நலத்திட்ட உதவிகளில் 3000 பயனாளி களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள், 7000 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடுகள், 12,086 பயனாளிகளுக்கு சுய உதவிக் குழு வங்கி நேரடி கடன், 25,669 பய னாளிகளுக்கு வேளாண்மை சார்ந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிவ.வீ. மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், மக்களவை உறுப்பினர் ஆர். சுதா, சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம், நிவேதா எம். முருகன், எஸ்.ராஜ்குமார், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தாட்கோ தலைவர் இளையராஜா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.