tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபு சோரன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

சென்னை: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிறு வனர், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் மற்றும்  விடுதலை அடைந்த இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பழங்குடியினத் தலைவர்களில் ஒருவரான மதிப்பிற் குரிய சிபு சோரன் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரி வித்திருக்கிறார். மேலும், சிபு சோரனின் வாழ்க்கையே சுரண்டலுக்கு எதிரான இடைவிடாத எதிர்ப்பு மற்றும் சமூக நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வரை யறுக்கப்பட்டது. பழங்குடியின மக்களின் பல ஆண்டுகால உரிமைக் கோரலை ஒரு புதிய மாநிலத்தைத் தோற்றுவித்த அரசியல் சக்தியாக அவர் மாற்றினார். வாழ்நாள் போராளியுமான சிபு சோரனை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள ஹேமந்த் சோரன் மற்றும் ஜார்க்கண்ட்  மாநில மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்க லையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஆறுதல் நெல்லை:

சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வந்த தூத்துக்குடி கவின் ஆணவக் கொலை வழக்கைத் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி சென்றுள்ள முத லமைச்சர் மு.க. ஸ்டாலின், நெல்லையில் உள்ள கவினின்  குடும்பத்தினரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கவின் கொலை செய்யப்பட்டதற்கு அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மோடி அரசின் மோசமான மனநிலை! முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: வங்காள மொழியை, ‘வங்கதேச மொழி’ என தில்லி காவல்துறை குறிப்பிட்டதற்கு, தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்து உள்ளார். தில்லி காவல்துறையின் கடிதத்தைக் கண்டித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில்,  கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், ‘”ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தில்லி காவல்துறை, வங்காள மொழியை ‘வங்காளதேச மொழி’ என்று குறிப்பிட்டி ருக்கிறது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழி.  இதனை தில்லி காவல்துறை அவமரியாதை செய்திருக்கிறது. இதுபோன்ற அறிக்கைகள் தற்செயலான பிழைகள் அல்லது தவறுகள் அல்ல. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் அடை யாளத்தை ஆயுதமாக்கும் ஒரு ஆட்சியின் மோசமான மனநிலையைத்தான் காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அரசு நலத்திட்ட விளம்பரங்கள்: தமிழக அரசு மேல்முறையீடு

புதுதில்லி: அரசு நலத்திட்ட விளம்பரங்களில் வாழும் தலைவர்களின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என உயர்  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதனை  எதிர்த்து, தமிழக அரசு  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளது. இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.  கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய  அமர்வின் முன்பு திங்களன்று  பார்வைக்கு வந்தது. அப்போது மாநில அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் முகுல் ரோத்கி, உயர் நீதிமன்ற உத்தரவு குறித்தும்,  அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்தார். இதுகுறித்த சுருக்கமான விவரங்களை பெற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு புதன்கிழமை (ஆக.6)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

44,418 பேர் பயன்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி  வைத்து, கடந்த சனிக்கிழமை நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 44,418 பேர் பயன்பெற்றனர். அதிகபட்சமாக சென்னை யில் 2,935, விழுப்புரத்தில் 2,013, திருவள்ளூரில் 1,416 பேர்  முகாம்களில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

1,850 உதவியாளர்களுக்கு ஒப்புதல்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி மூலம் 1,850 உதவியா ளர்களைத் தேர்வு செய்ய மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 400 உதவிப் பொறியாளர்கள், 1,850 கள உதவியாளர்களைத் தேர்வு செய்ய மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. டி.என். பி.எஸ்.சி.யின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு கள் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை: புழல் சிறையில் கைதிகளுக்கு சுகாதாரமற்ற உணவு வழங்குவதாக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய் யப்பட்டது. தனிச் சிறையில் வைத்து துன்புறுத்துவதாக சென்னை யைச் சேர்ந்த பைஃசல் ஹமீது என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதில் தமிழ்நாடு அரசு  பதில் தர உத்தரவிட்டார்.

வழக்கு தொடரலாம்

சென்னை: தமிழக டிஜிபி நியமனம் தொ டர்பான விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப் பிக்க இயலாது என்று  சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித் துள்ளது. புதிய டிஜிபி நியமனம், உச்ச நீதி மன்ற விதிகளுக்கு முர ணாக இருந்தால், அதை  எதிர்த்து வழக்கு தொட ரலாம் என்று உயர்நீதி மன்றம் தெரிவித் துள்ளது.

பதிலளிக்க உத்தரவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின்  மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27  பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதனி டையே வழக்கை சிபி ஐக்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

வைகோ வலியுறுத்தல்

சென்னை: “தேர்தல் ஆணையத்தின் கணக் கீட்டின்படி 36 லட்சம் வாக்காளர்கள் நிரந்தர மாக பீகாரில் இருந்து வேறு மாநிலங்களுக்கு இடம் மாறியுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து  பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டை குறி வைத்திருக்கும் பாஜக, வாக்காளர் பட்டியலில் வெளி மாநி லத்தவர்களை சேர்த்து தேர்தலில் ஆதாயம் அடைய முயற்சிப்பதை வேடிக்கைப் பார்க்க முடியாது. தலைமைத் தேர்தல் ஆணையம் வெளி மாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சிகளை முறிய டிக்க வேண்டும்” என்று  வைகோ வலியுறுத்தி யுள்ளார்.