tamilnadu

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நெல்லை ஆட்சியர் தகவல்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நெல்லை ஆட்சியர் தகவல்

தென்காசி, ஆக.23- மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000- மும், இரண்டாம் பரிசாக ரூ.2,000- மும், மூன்றாம் பரிசாக ரூ.1,000- மும், சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன. மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000- மும், இரண்டாம் பரிசாக ரூ.75,000- மும், மூன்றாம் பரிசாக ரூ.50,000- மும் வழங்கப்படும். குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75,000- மும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50,000- மும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25,000- மும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். மேலும் விபரங்களுக்கு 04633 - 212580, 8610037399, 7676591051, 7448997877, 7339283297 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.