tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

அக்.11 கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் காணொலி வாயிலாக உரை

நாகர்கோவில்,அக்.9-  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட   95 கிராம ஊராட்சிகளிலும் 11.10.2025  அன்று  காலை  11  மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற வுள்ளது.  இக்கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயி லாக கிராம மக்களிடம் உரை யாற்றவுள்ளார். எனவே, கன்னியாகுமரி மாவட்டத் திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் கிராமசபைக்கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.  

நோ ஹெல்மெட்- நோ என்ட்ரி திட்டம் அமல்

நாகர்கோவில். அக்.9- நோ ஹெல்மெட்-நோ என்ட்ரி திட்டத்தை நாகர்கோ வில் போக்குவரத்து காவல்துறை அமல்படுத்தியுள்ளது. நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் சுமார் 15 பள்ளிகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலினால் கடந்த ஜூலை 9 ஆம் தேதி  அன்று  சாலை பாதுகாப்பு மன்றம்  ரோடு சேப்டி கிளப் ஏற்படுத்தப்பட்டு அந்தந்த பள்ளி மாணவ, மாணவியரைக் கொண்டு போக்குவரத்து சீர்படுத்தப் படுகிறது. தலைக்கவசம் அணியாமல் பள்ளி குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நோ ஹெல்மெட்-நோ என்ட்ரி  விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வியாழனன்று கவிமணி அரசு பள்ளி அருகே தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த பெற்றோருக்கு சாலை பாதுகாப்பு மன்ற மாணவி யரைக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.