திருவாரூரில் மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா ஜனாதிபதி முர்மு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்!
திருவாரூர், செப். 3 - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) 10-ஆவது பட்டமளிப்பு விழா, மத்தியப் பல்கலைக்கழகத்தின் மேன்மைய ரும், குடியரசுத் தலைவருமான திரௌபதி முர்மு முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஜி.பத்மநாபன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், தமிழ்நாடு அமைச்சர்கள் கோவி. செழியன், கீதாஜீவன் மற்றும் பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் ஜி.பத்மநாபன் மற்றும் துணைவேந்தர் பேராசிரியர் எம். கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இந்த ஆண்டு 1,010 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இவர்களில் 568 பெண்கள் மற்றும் 442 ஆண்கள். இதில் 45 பேர் தங்கப் பதக்கம் வென்றவர்கள் (34 பெண்கள் மற்றும் 11 ஆண்கள்) மற்றும் 44 முனைவர் பட்ட மாணவர்கள் (27 பெண்கள் மற்றும் 17 ஆண்கள்) ஆகியோருக்கு ஆய்வு பட்டங்கள் வழங்கப்பட்டன. 771 மாணவர்கள் (454 பெண்கள் மற்றும் 317 ஆண்கள்) டிப்ளமோ, இளங்கலை, முது கலை மற்றும் முனைவர் பட்டங்களை பெற்றனர்.