tamilnadu

img

ஸ்மார்ட் மீட்டர் பணியை மின் வாரியமே செய்ய மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

ஸ்மார்ட் மீட்டர் பணியை மின் வாரியமே செய்ய மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

கரூர், ஆக.20 - மின்வாரிய விநியோகத்தில் கொல்லைப்  புற வழியாக தனியாரை புகுத்தும், பொது  மக்களையும் மின் வாரிய பணியாளர்களை யும் பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் திறப்பை கைவிட வேண்டும்.  அரசாணை 100-இன்படி 12.2.2024 இல் ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்து, அரசு உத்தரவாதத்துடன் கூடிய ஒப்பந்தமாக மாற்ற வேண்டும். மின்வாரிய பணியாளர்களுக்கும் ஓய்வு பெற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டிய பணப்பயன் மற்றும் பென்சனுக்கு உத்தர வாதம் வழங்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர்  வைக்கும் பணியை மின்வாரியமே செய்ய  வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மின் வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் கா.தன பால், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் ப.நெடுமாறன் ஆகியோர் உரையாற்றினர். திருச்சிராப்பள்ளி திருச்சி பெருநகர் வட்டக் கிளை சார்பில் மன்னார் புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க  வட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித் தார். கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன், வட்டச் செயலாளர் பழனியாண்டி, பொருளாளர் இருதயராஜ், வட்ட துணைத் தலைவர்கள், கோட்ட செயலாளர்கள் பேசினர்.  தஞ்சாவூர் தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்டத் தலைவர் ஏ.அதி தூத மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், திட்டச் செயலாளர் பி.காணிக்கைராஜ் ஆகி யோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.  திருவாரூர் திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திட்டத் தலைவர் சகாய ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச்  செயலாளர் இரா.மாலதி, பொருளாளர் கஜேந்திரன், மின் ஊழியர் மத்திய அமைப் பின் திட்ட செயலாளர் ராஜேந்திரன், கோட்டச்  செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாகப்பட்டினம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நாகை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாகை கோட்டத்  தலைவர் கே.பாஸ்கரன் தலைமை வகித் தார்.  ஐசிடிஎஸ் சங்க மாவட்டச் செயலாளர் வி.கவிதா, சாலைப் போக்குவரத்து மாவட்டச் செயலாளர் ஆர்.ரவி, எஸ்இடிசி மத்திய சங்க துணைத் தலைவர் ஆர்.சர வணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். ஆர்.ராஜேந்திரன் மற்றும் திட்ட நிர்வாகிகள் விளக்கவுரையாற்றினர். திட்ட செயலாளர் என்.வெற்றிவேல் நிறைவுரையாற்றினார்.