tamilnadu

img

நூற்றாண்டு கண்ட அரசு தொடக்கப்பள்ளி

நூற்றாண்டு கண்ட அரசு தொடக்கப்பள்ளி

கோவை, ஆக.29 – சூலூரில் நூற்றாண்டு கண்ட ஊராட்சி பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கமிக்கும் விழா நடை பெற்றது. இதில், ஆட்சி யர், நாடாளுமன்ற உறுப்பி னர் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். கோவை மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் நூற் றாண்டு நிறைவு விழா மற் றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளி யன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங் கேற்று, பள்ளியின் நூற் றாண்டு மலரை வெளியிட்ட னர். இம்மலரை சூலூர் பேரூ ராட்சித் தலைவர் ேதவி மன்னவன் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழா வில் முன்னாள் மாணவர்க ளுக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. பல ஆண்டு களுக்குப் பிறகு ஒன்றுகூடிய மாணவர்கள், குழுப் புகைப் படங்கள் எடுத்து மகிழ்ச் சியை பகிர்ந்துகொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர் மன்ன வன், புலவர் செந்தலை கௌதமன், பள்ளி நிர்வாகத் தினர், ஆசிரியர்கள், பெற் றோர்கள், முன்னாள் மாண வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.