அதிமுக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா
பேட்டை அருகே உள்ள பாடியம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் அதிமுக பிரமுகர் மூர்த்தியின் வீட்டில் இரிடியம் மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனை வெள்ளியன்று காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவடைந்தது. 10 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் மூர்த்தியின் வீட்டில் இருந்து கணக்கில் வராத 3.19 லட்சம் ரூபாய் பணமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை முடிவில் மூர்த்தியை விசாரணைக் காக போலீசார் காரில் அழைத்துச் சென்றனர். சிபிசிஐடி அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளனர். இரிடியம் மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடந்த சில மாதங் களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பலரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
‘தேர்தல் வரவுள்ளதால் மணிப்பூர் செல்கிறார்’
சென்னை: 2027 ஆம் ஆண்டில் தேர்தல் வரவுள்ளதால் பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார் என திமுக எம்.பி., கனி மொழி தெரிவித்துள்ளார். அதிமுகவை உடையாமல் பார்த்துக் கொண்டால் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு. குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கூடுதல் அவகாசம் தேவை
சென்னை: வருமான வரியை தாக்கல் செய்ய இரண்டு வாரம் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என விசிக எம்.பி. திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் செப்.15 ஆம் தேதியுடன் நிறை வடையும் நிலையில் இந்த கோரிக்கையை வைத்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து விசிக எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் இந்த கோரிக் கையை வலியுறுத்தினர்.
எஃகு வேலி அமைக்க அனுமதி
சென்னை: வனப் பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கவும், மனித-விலங்குகள் மோதல்களை குறைக்கும் வகையிலும், கோவை மாவட்டத் தில் தொண்டாமுத்தூர்-தடாகம் இடையே 10 கிலோ மீட்டர் தூரத் திற்கு எஃகு கம்பி வேலி அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்கரவர்த்தி ஆகி யோர், கோவையில் எஃகு வேலிகள் அமைக்க உள்ள பகுதி களில் செப்.5, 6 ஆம் தேதிகளில் நேரில் ஆய்வு செய்தனர். தங்கள் ஆய்வில் வனத் துறையினர், உள்ளூர் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், “யானை கள் ஊருக்குள் நுழைந்து மனித உயிர்களுக்கும், பயிர்களுக் கும் பாதிப்பை ஏற்படுத்துவதை தடுக்க எஃகு வேலி
வழித்தட நிலங்களை கையகப்படுத்த அனுமதி
சென்னை: நீலகிரி மாவட்டம் சேகூர் யானை கள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நடவ டிக்கைகளை 6 மாதங் களில் தொடங்க தமிழ் நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மேலும், யானைகள் போக்குவரத்துக்கு இடை யூறு ஏற்படுத்தாமல், மின்வேலிகள் அமைக் காமல் விவசாயப் பணி களை மேற்கொள்ளவும் அனுமதி அளித்துள்ள னர்.
பயணத்தை தொடங்கிய விஜய்
திருச்சிராப்பள்ளி: தேர்தல் பிரச்சாரத்திற் காக நாடெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சனிக் கிழமை திருச்சியில் தனது முதல் சுற்றுப்பய ணத்தைத் தொடங்கி னார். சனிக்கிழமை காலை தனி விமானம் மூலம் திருச்சி வந்த டைந்த அவரை வர வேற்க, விமான நிலை யம் முதல் காந்தி மார்க்கெட் மரக்கடை வரை லட்சக் கணக்கான தொண்டர் கள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விஜய் பிரச் சாரம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மைக் வேலை செய்ய வில்லை; மேலும் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்க மாக முடித்துக் கொண்டார்.