tamilnadu

விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் சிபிஐ முதல் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் சிபிஐ முதல் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

கரூர், அக். 23 - கரூரில், தமிழக வெற்றிக் கழக  தலைவர் விஜய்யின் பிரச்சார நிகழ்ச்சி யின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ குழு வினர், தங்களின் முதல் அறிக்கை யை கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரச்சார நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்  உயிரிழந்தனர். 110 பேர் படுகாயமடைந் தனர். இதுதொடர்பாக சிபிஐ விசார ணைக்கு உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், இந்த விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான ஆணையம் கண்காணிக்கும் என்று அறிவித்தது. இதையடுத்து, குஜராத் மாநி லத்தைச் சேர்ந்த காவல் கண்காணிப் பாளர் பிரவீன் குமார் தலைமையில், கூடுதல் துணை காவல் கண்காணிப் பாளர் முகேஷ் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட சிபிஐ  குழு கடந்த அக்டோபர் 15 அன்று  கரூர் வந்தது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணையை தொடங்கியது. அதுவரை இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுக் குழு தலைவர் அஸ்ரா கார்க் தலைமை யிலான குழு வழக்கின் ஆவணங்கள் மற்றும் விசாரணை நிலை அறிக்கை யை சிபிஐ குழுவிடம் ஒப்படைத்தது.  அந்த ஆவணங்களை பெற்று விசாரணை நடத்திய சிபிஐ குழு வினர், சம்பவம் நடைபெற்ற வேலுச் ச்சாமிபுரத்தையும் நேரில் ஆய்வு செய்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 19  அன்று சொந்த ஊருக்குச் சென்றிருந்த சிபிஐ அதிகாரிகள், புதனன்று மீண்டும் கரூர் திரும்பினர். வியாழக்கிழமை முதல் மீண்டும் விசாரணையை துரிதப்படுத்தினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னர், படுகாயமடைந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், ஆம்பு லன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழு வில், எல்லைப் பாதுகாப்புப் படை கூடு தல் காவல் பணிப்பாளராக பணிபுரி யும் தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரி சுமித் சரண், தில்லி ரிசர்வ் காவல் படை கூடுதல் காவல் பணிப்பாளராக பணிபுரியும் தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரி சோனல் மிஸ்ரா ஆகிய இரு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வெள்ளிக்கிழமைக்குள் கரூர் வந்து சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உள்ளனர். இந்நிலையில், காவல் கண்கா ணிப்பாளர் பிரவீன் குமார் தலைமை யிலான சிபிஐ குழுவினர், கடந்த 8 நாட்களாக மேற்கொண்ட விசார ணை தொடர்பான அறிக்கையை, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் நீதிபதி பரத் குமார் முன்னி லையில் வியாழக்கிழமையன்று தாக்கல் செய்துள்ளனர்.