tamilnadu

அரசு அலுவலகத்திலேயே அரங்கேறிய சாதிய வன்கொடுமை திண்டிவனத்தில் பட்டியலின ஊழியரை காலில் விழ வைத்து அராஜகம்

ரசு அலுவலகத்திலேயே அரங்கேறிய சாதிய வன்கொடுமை திண்டிவனத்தில் பட்டியலின ஊழியரை காலில் விழ வைத்து அராஜகம்

சென்னை, செப். 3 - திண்டிவனம் நகராட்சியின் பட்டி யலின ஊழியரை காலில் விழவைத்த சாதிய வன்கொடுமைக்கு உள்ளா க்கிய நபர்களை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கவுன்சிலரும் - அவரின் கணவரும் இழிபேச்சு திண்டிவனம் நகராட்சியில் பட்டி யல் சமூகத்தைச் சார்ந்த எஸ்.முனியப்பன், இளநிலை உதவியாள ராக பணியாற்றி வருகிறார். கடந்த  29.8.2025 அன்று 2021-ஆம் ஆண்டின் கோப்பு ஒன்றை எடுத்து வருமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய கோப்பு என்பதால் தேடு வதற்கு இயல்பான தாமதம் ஏற்பட்டு ள்ளது. இதனால், ஆத்திரமடைந்த 20-ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரம்யாவும் அவரது கண வர் ராஜா (எ) மரூர் ராஜாவும் ஊழியர் முனியப்பனை மிகவும் இழிவான முறையில் பேசியுள்ளனர்.  தவறே செய்யாமல் மன்னிப்பு கேட்ட முனியப்பன் அத்துடன் முனியப்பனை நகராட்சி  ஆணையர் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஆணையர் இல்லாத நிலையில் நகர்மன்றத் தலைவரின் கணவர் ரவிச்சந்திரன், உறுப்பினர் ரம்யா, அவரது கணவர் ராஜா மற்றும் நகராட்சி அதிகாரிகள் நெடுமாறன், பழனி, செந்தில்குமார், ஆனந்தன், திலகவதி, பிர்லா செல்வம் நகர்மன்ற தலைவரின் உறவினர் காமராஜ் ஆகியோர் முனியப்பனை சாதியின் பெயரைச் சொல்லி இழிவு படுத்தியும், மிரட்டியும் மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். தவறு ஏதும் செய்யாத நிலையிலும் முனியப்பன் மன்னிப்பு கோரியுள்ளார்.  காலில் விழவைத்து சாதிய வன்கொடுமை எனினும் மேற்படி நபர்கள், மன்னிப்பை வாயால் கோட்டால் போதாது என்று முனியப்பனை கவுன் சிலர் ரம்யாவின் காலில் விழ வைத் துள்ளனர். அரசு அலுவலகத்திலேயே நடைபெற்ற இந்த சாதிய வன்கொடு மையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டுமென, சாதிய வன்கொடுமைக்கு ஆளான முனி யப்பன், திண்டிவனம் காவல் துணை  கண்காணிப்பாளரிடம் (உட்கோட்டம்) புகார் மனு அளித்துள்ளார். நகராட்சி தலைவரின் கணவரையும் கைது செய்க! தற்போது இந்த புகார் மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட நகர்மன்றத் தலைவரின் கணவர், நகராட்சி ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர், அவரது கணவர் ஆகியோரை கைதுசெய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு காவல்துறையையும், தமிழ்நாடு அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.  விழுப்புரம் மாவட்டக்குழு கண்டனம் திண்டிவனம் நகராட்சியில் நடைபெற்ற சாதிய வன்கொடுமை சம்பவத்திற்கு சிபிஎம் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.