எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த அமலாக்கத் துறையினர் மீது வழக்கு!
தமிழக காவல்துறை நடவடிக்கை
தமிழக காவல்துறை நடவடிக்கை சென்னை: சென்னை சேப்பாக்கம் பகுதி யில் உள்ள எம்எல்ஏ-க்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை யினர் மீது திருவல்லிக்கேணி காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது மகன் ஐ.பி. செந்தில்குமார் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை யினர் சனிக்கிழமையன்று திடீர் சோதனை நடத்தினர். இதனொரு பகுதியாக, சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ. பெரிய சாமியின் அரசு பங்களா, சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள ஐ. பெரியசாமி யின் மகனும், பழனித் தொகுதி எம்எல்ஏ-வுமான செந்தில்குமாரின் அறை ஆகிய இடங்களிலும் அனுமதி பெறாமல் நுழைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அனுமதி இன்றி எம்எல்ஏ விடுதி அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த தாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் புகார் அளித்தார். அதன்பேரில், திருவல்லிக்கேணி போலீசார் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.