பதிவு ரத்து சட்ட விரோதமானது மமக தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை
சென்னை: விதிமுறைகளை மீறியதாக தமிழ்நாட்டில் 64 அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணை யம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019 முதல் தேர்தலில் போட்டி யிடவில்லை எனக் கூறி மனிதநேய மக்கள் கட்சி உட்பட 474 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக் கிறது. இந்த முடிவு மக்கள் பிரதி நிதித்துவச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி 2009 முதல் பல்வேறு சட்டமன்ற, நாடாளு மன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது. பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் சொந்த சின்னத்தில் வெற்றியும் பெற்றுள்ளது. பேரூராட்சி மன்றத் தலைவர்களாக எம் கட்சியினர் பணி யாற்றி வருகிறார்கள். ஆண்டு தோறும் வருமான வரிக் கணக்குகளை முறையாகச் செலுத்தி வருகிறோம். தேர்தல் ஆணையத்தின் இந்த நட வடிக்கை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு விரோதமாகவும் அரச மைப்புச் சட்டத்திற்கு விரோதமாக வும் இருக்கிறது. எனவே இது குறித்து மீண்டும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்வோம். சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, தேவைப்படு மெனில் நீதிமன்றத்தை நாட இருக் கிறோம்” என தெரிவித்துள்ளார்.
