tamilnadu

img

அக்னி ஆற்றின் குறிக்கே தடுப்பணை அமைத்து தருக!

அக்னி ஆற்றின் குறிக்கே தடுப்பணை அமைத்து தருக! 

விவசாயிகள் சங்கம் கோரிக்கை 

தஞ்சாவூர், ஆக. 23-   தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பேராவூரணி ஒன்றியத் தலைவர் வீ.கருப்பையா, நிர்வாகிகள் பூவாணம் எழிலரசன், கஜேந்திரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியர் சங்கரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், கோட்டாகுடி அருகில், கார்காவயல் அக்னி ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், பாசனத்துக்காக தடுப்பணை அமைக்க வேண்டும். இரண்டாம் புளிக்காடு வங்கியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாலும், கட்டையங்காட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி இருப்பதாலும், இடைப்பட்ட தூரத்தில் அரசுடைமை வங்கி ஒன்றை அமைக்க வேண்டும். மணக்காடு கூத்தாண்டவர் குளத்திற்கு தண்ணீர் வழங்கும் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றி, சரி செய்து குளத்திற்கு நீர் நிரப்பித் தர வேண்டும். கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கழிவு நீர் வடிகால் வாய்க்காலை சரி செய்து தர வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.