4ஜி, 5ஜி சேவையை விரைவில் வழங்க பிஎஸ்என்எல் ஊழியர் மாநாடு தீர்மானம்
கோயம்புத்தூர், ஜூலை 26 – இந்திய மக்களுக்கு தரமான 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை விரைவில் வழங்க வேண்டும் என பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் (BSNLEU) 11 ஆவது அகில இந்திய மாநாடு வலி யுறுத்தி உள்ளது. கோவையில், ஜூலை 22, 23 தேதி களில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அகில இந்திய மாநாடு எழுச்சிகரமாக நடைபெற்றது. நாடு முழுவதுமிருந்து 1500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் மாநாட்டை துவக்கிவைத்து உரை யாற்றினார். மாநிலத் தலைவர் அ.சவுந் தரராசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன், பிஎஸ்என்எல் இயூ ஸ்தாபக பொதுச் செயலாளர் வி.ஏ.என். நம்பூதிரி, பொதுச்செயலா ளர் பி. அபிமன்யு உள்ளிட்ட தலைவர் கள் உரையாற்றினர். மாநாட்டில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அகில இந்திய தலைவராக எம். விஜயகுமார் (கேரளா), பொதுச்செய லாளராக அனிமேஷ் மித்ரா (மேற்கு வங்கம்), பொருளாளராக இர்பான் பாஷா (கர்நாடகா) உள்ளிட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். 15 ஆண்டு களாக பொதுச்செயலாளராக பணி யாற்றிய பி. அபிமன்யு (தமிழ்நாடு) துணைத்தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார். ஒன்றிய அரசாங்கத்தின், தவறான பொருளாதார கொள்கைகளால், தடு மாறிக் கொண்டிருக்கும்- இந்திய மக்க ளின் சொத்தான- பிஎஸ்என்எல் எனும் பொதுத்துறை நிறுவனத்தை பாது காக்கவும், இந்திய நாட்டின் உழைப் பாளி மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து போராட உறுதியேற்று,11-ஆவது கில இந்திய மாநாடு நிறைவுபெற்றது.