tamilnadu

img

புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பாக தாய்ப்பால்

புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பாக தாய்ப்பால் வார விழா நிறைவு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் குழந்தைகள் நல மருத்துவர் பீட்டில் உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சத்துணவுப் பொருட்கள் அடங்கிய பரிசு பை சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு  வனத்துறையின் கோடைகால சிறப்பு முகாம் 

தஞ்சாவூர், ஆக. 10-  தமிழ்நாடு அரசு, வனம் - காலநிலை மாற்றம் துறை, தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கோடை காலச் சிறப்பு முகாம், வெள்ளிக்கிழமை பேராவூரணி அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட வன அலுவலர் எம்.ஆனந்த் குமார் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ். சந்திரசேகரன் வரவேற்றார்.  பட்டுக்கோட்டை கடலோரப் பாதுகாப்புக்குழும துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.முருகன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் என். மணிகண்டன், தஞ்சாவூர் மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ச.சிவசுப்பிரமணியன், ஓம்கார் பவுண்டேஷன் இயக்குநர் டாக்டர் வி.பாலாஜி, பறவையியலாளர் டாக்டர் எஸ்.சிவகுமார், அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல்படை, காவல்துறையினர், 10 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.  பட்டுக்கோட்டை வனவர் ஆர்.ராஜ்குமார் நன்றி கூறினார்.  முகாமில், அலையாத்திக் காடுகளின் முக்கியத்துவம், கடல் வாழ் பல்லுயிரினங்கள், கடல் வாழ் பறவையினங்கள் குறித்து நிபுணர்கள் விளக்கிப் பேசினர்.  பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.