வலங்கைமானில் தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை
திருவாரூர், செப். 22- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி 14 ஆவது வார்டு, கோவில்பத்து கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை அடைத்து தீண்டாமை சுவர் கட்டிய செல்வமணி நகர் உரிமையாளர் ஜாபர்அலி மீது நடவடிக்கையும், பொதுப்பாதையை திறந்து விடவேண்டும். தீண்டாமை சுவரை அகற்றி விடவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக முற்றுகை போராட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. முற்றுகைப் போ ராட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் கே.முரளி தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கே.தமிழ்மணி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி. கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் மாநிலச் செயலாளர் ஆர். கலைச்செல்வி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட மற்றும் பலர் கோரிக்கை விளக்கி உரையாற்றினர். முன்னதாக, மேல் கோவில்பத்து பெட்ரோல் பங்க் அருகில் இருந்து மாபெரும் பேரணி, எழுச்சியாக கோரிக்கை கோஷங்களை எழுப்பிய வாறு சென்றனர். பேரணி கடைவீதி அருகே வரும்போது, காவல்துறை யினர் அராஜகமன முறை யில் காவல்துறை வாக னத்தை சாலையின் நடுவே நிறுத்தி பேரணியை தடுத்து நிறுத்தி தலைவரை கைது செய்ய முயற்சித்தனர். காவல்துறையின் தடுப்பை மீறி வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகம் சென்று முற்றுகை போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஈடு பட்டனர். தொடர்ந்து நடை பெற்ற போராட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கண்டனம் முழக்கமும் காவல்துறை கண்டித்து கோஷங்களும் எழுப்பப் பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் டி.சண்முகம் குடவாசல் டி.லெனின், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ஜெகதீஸ்வரி, சிபிஎம் குடந்தை மாநகரச் செயலாளர் செந்தில் மற்றும் வர்க்க வெகுஜன அரங்கத்தின் தோழர்கள், தோழமை கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.